Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு...

மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு...

மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு...

மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு...

ADDED : பிப் 27, 2025 03:02 PM


Google News
Latest Tamil News
கணவன், மனைவி விட்டுக் கொடுக்காமல் செயல்பட்டால் வீட்டில் நிம்மதி இருக்காது. இவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகிலுள்ள ஏமநல்லுார் சுந்தரேஸ்வரரை வழிபட்டால் பிரச்னை தீரும். மகிழ்ச்சியான மணவாழ்வு அமையும்.

இங்கு சுந்தரேஸ்வரர் என்னும் பெயரில் சிவபெருமானும், அகிலாண்டேஸ்வரி என்னும் பெயரில் அம்பிகையும் அருள்கின்றனர். திருநாவுக்கரசர், கருவூரார் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. முதலாம் ராஜராஜ சோழனின் மனைவி திரைலோக்கிய மாதேவியார் பிறந்த ஊர் என்பதால் 'திரைலோக்கி' என முன்பு அழைக்கப்பட்டது.

பிருகு முனிவர் இங்கு வழிபட்டு நற்கதி அடைந்தார். நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவான் தனக்கு ஏற்பட்ட சாபம் தீர இங்கு சிவபூஜை செய்து விமோசனம் பெற்றார். ஒரே கல்லில் உருவான ரிஷபாரூடரை (ரிஷபம், சிவபெருமான், அம்பிகை, லிங்கம் சேர்ந்த வடிவம்) இங்கு தரிசிக்கலாம். இதனால் இத்தலத்தை 'நித்ய பிரதோஷ தலம்' என அழைக்கின்றனர். சிவனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டு சாம்பல் ஆனவர் மன்மதன். அவரது மனைவி ரதி இங்கு தவம் செய்து மன்மதனை உயிர் பெறச் செய்தாள்.

இக்கோயிலின் மகா மண்டபத்தில் ஒரே கல்லில் ஆன ரதி, மன்மதன் சிலைகளை காணலாம். திருமணத்தடை விலக இவர்களை வழிபடுகின்றனர். விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், பைரவர், சனிபகவான், சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளன. தலமரம் சரக்கொன்றை. தீர்த்தம் லட்சுமி தீர்த்தம்.

எப்படி செல்வது: கும்பகோணத்தில் இருந்து 22 கி.மீ.,

விசேஷ நாள்: சித்திரை அவிட்டம், மார்கழி திருவாதிரை, வியாழன்.

நேரம்: காலை 6:00 - 11:30 மணி; மாலை 3:30 - 7:30 மணி

தொடர்புக்கு: 94437 14384

அருகிலுள்ள கோயில்: திருவிடை மருதுார் மகாலிங்கேஸ்வரர் 15 கி.மீ., (மனநோய் தீர)

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:30 - 9:00 மணி

தொடர்புக்கு: 0435 - 246 0660





      Our Apps Available On




      Dinamalar

      Follow us