Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/பூசணித்தீபம் ஏற்றினால்...

பூசணித்தீபம் ஏற்றினால்...

பூசணித்தீபம் ஏற்றினால்...

பூசணித்தீபம் ஏற்றினால்...

ADDED : பிப் 28, 2025 08:00 AM


Google News
Latest Tamil News
புதுக்கோட்டை மாவட்டம் துர்வாசபுரத்திலுள்ள காலபைரவருக்கு பூசணி தீபம் ஏற்றினால் கிரகதோஷம் விலகும். நினைத்தது நிறைவேற தேய்பிறை அஷ்டமியன்று மண்ணால் ஆன நாய் சிலையை காணிக்கை தருகின்றனர்.

ராமர் அயோத்தியில் இருந்து வனவாசம் வந்த போது ரிஷிகளுடன் தங்கியிருந்தார். அதில் ஒருவரான துர்வாச மகரிஷி நெல்லி வனமான இப்பகுதியில் சுயம்புலிங்கத்தை வழிபட்டு வந்தார். அந்த லிங்கம் காலப்போக்கில் மண்ணில் புதைந்தது. பிற்காலத்தில் மேய்ச்சல் பகுதியான இங்கு பசு ஒன்று குறிப்பிட்ட இடத்தில் தினமும் பால் சுரந்தது. அதைக் தோண்டிய போது சிவலிங்கம் புதைந்து கிடந்தது. இதையறிந்த பாண்டிய மன்னர் 1032ல் கோயில் கட்டினார். பாதாளத்தில் இருந்து கிடைத்ததால் சுவாமி 'பாதாளேஸ்வரர்' எனப்படுகிறார். 'சுந்தரேஸ்வரர்' என்றும் பெயருண்டு.

துர்வாசர் தவம் செய்த தலம் என்பதால் ஊருக்கு 'துர்வாசபுரம்' எனப் பெயர் வந்தது. தியான நிலையில் உள்ள துர்வாசரை வியாழன் அன்று வழிபட கல்வி வளர்ச்சி உண்டாகும்.

காலபைரவர் நின்ற கோலத்தில் கையில் கபாலம், பாம்பு, திரிசூலம், உடுக்கை ஏந்தியபடி, நாய் வாகனத்துடன் உள்ளார். கடன்பிரச்னை, மனக்குழப்பம் தீர தேய்பிறை அஷ்டமியன்று தீபமேற்றுகின்றனர்.

பாகம்பிரியாள் அம்மன் குவளை மலர் ஏந்தியபடி இருக்கிறாள். அம்மனின் தலை நாணத்தால் சற்று சாய்ந்தபடி உள்ளது. செவ்வாய், வெள்ளி, பவுர்ணமியன்று அம்மனை தரிசிக்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.

எப்படி செல்வது: புதுக்கோட்டையில் இருந்து திருமயம் 22 கி.மீ., அங்கிருந்து 4 கி.மீ.,

விசேஷ நாள்: சம்பக சஷ்டி, ஆனித்திருமஞ்சனம், திரியம்பக அஷ்டமி, மகாசிவராத்திரி.

நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி

தொடர்புக்கு: 94427 62219

அருகிலுள்ள கோயில்: கண்ணனுார் பாலசுப்பிரமணியர் 2 கி.மீ.,

நேரம்: காலை 10:30 - 11:30 மணி

தொடர்புக்கு: 94427 62219





      Our Apps Available On




      Dinamalar

      Follow us