ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 21
ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 21
ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 21
ADDED : ஜன 19, 2024 01:44 PM

இலங்கை மாதேவி
ராவணனால் பலவந்தமாக அபகரிக்கப்பட்ட சீதை, இலங்கையில் சிறைபட்டிருக்கிறாள் என்ற தகவல் உறுதியானது. அவள் எந்த நிலையில் இருக்கிறாள், ராவணன் எவ்வாறெல்லாம் துன்புறுத்துகிறான், தன்னை எப்படி பாதுகாக்கிறாள் என அறிய ராமனுக்கு ஆவல் ஏற்பட்டது. அனுமனை அழைத்து துாதுவனாகச் சென்று ராவணனிடம் சுமுகத்தீர்வுக்கு யோசனை சொல்லச் சொன்னான். சீதையின் நிலவரத்தையும் அறிந்து வரப் பணித்தான்.
பரந்த கடலின் இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போனால்தான் இலங்கையை அடைய முடியும். அனுமனால் மட்டுமே அது சாத்தியம் என்ற யோசனையை அனைவரும் சொன்னதும் கூட ராமனுடைய இந்த முடிவுக்கு ஒரு காரணமாகும்.
கடற்கரையில் ஓங்கி உயர்ந்தான் அனுமன், அவனது உள்ளம், உதடு இரண்டும் 'ராம' நாமத்தை ஜபிக்க, விஸ்வரூபம் எடுத்த அவன் பூமியை தன் காலால் உந்தி மேலெழுந்தான்.
அவனது வேகத்தால் சுழல் உருவாகவே கடல் தடுமாறியது. ஆகாயமோ அவனது உயரம் கண்டு தான் இன்னும் மேல் நோக்கி நீள வேண்டுமோ எனக் குழம்பியது.
தாவிய அனுமன் இலங்கை நகரின் நெடிய மதில் முன் வந்து நின்றான். உள்ளே நுழைய இரவு தான் சரியான நேரம் என உணர்ந்து காத்திருந்தான். பிறகு மதில் மீது தாவினான். உள்ளே குதித்து விடலாம் என்றிருந்த அவனை எதிர்பாராத வகையில் விசித்திர பெண் உருவம் ஒன்று தடுத்தது.
'யாரடா நீ?' எனக் கேட்ட தோரணையில் அதன் அதிகாரம் வெளிப்பட்டது. 'என்ன தைரியம் இருந்தால்
பாதுகாப்பு மிகுந்த இந்த மதில் மீது
நிற்பாய்? உயிர் பயம் இல்லையா?'
எனக் கேட்டது.
அனுமன் தயங்கினான். ராட்சசி போல கோரத் தோற்றத்தோடு இருந்த அவளை வேடிக்கை உணர்வுடன் பார்த்தான். 'அம்மா, நான் இந்த அழகிய நகரைச் சுற்றிப் பார்க்க விரும்பினேன். அதனால்தான் வந்தேன். ஏன் தடுக்கிறாய்? உள்ளே நுழைந்தால்
உனக்கு என்ன நஷ்டம்?' என பணிவுடன் கேட்டான்.
'சுற்றிப் பார்க்க வந்தாயா?' என இளக்காரமாகக் கேட்டாள் அரக்கி. 'சிவபெருமான் போன்றவரே இங்கு உள்ளே நுழைய பயப்படுவர். நீயோ அற்பக்குரங்கு, யார் சொல்லி வந்தாயோ! ஏற்படவிருக்கும் பேராபத்தை உணராத அறிவிலியே, இங்கிருந்து ஓடு...'' என அனுமனை விரட்டினாள்.
அனுமன் சிரித்தபடி, 'உன் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன். செல்லத்தான் செய்வேன்'' என உறுதியாக தெரிவித்தான்.
அவள் இலங்கையின் காவல் தெய்வம் இலங்கை மாதேவி எல்லா திசைகளையும் கண்காணிக்கும் அரக்கி. சிறிதும் அஞ்சாத அனுமனிடம், 'உன்னை நான் அழிப்பேன். அதற்கு இடம் கொடாமல் மன்னிப்பு கேட்டுக் கொண்டு ஓடு' என எச்சரித்தாள்.
அனுமனோ அசையாமல் நின்றிருக்க, கோபமுடன் தன்னிடமிருந்த ஆயுதங்களை எறிந்தாள். அவனோ அலட்சியத்துடன் முறித்து திரும்ப எறிந்தான்.
அவனுடைய வீரம், அஞ்சாத தீரம் கண்டு வியந்தாள் மாதேவி. 'இவன் சாதாரண வானரம் அல்ல. எதிர்த்து நிற்பதோடு ஆயுதங்களையும் உடைத்து எறிகிறானே' என வியந்தாள்.
குழப்பத்தில் இருந்து மீண்டு வரட்டும் எனக் காத்திருந்தான் அனுமன். ஆயுதங்களை இழந்த நிலையில் இனி தாமதிக்கக் கூடாது என்ற உறுதியுடன் கைகளாலேயே அடித்து வீழ்த்த எண்ணினாள். வலை போல தன் கைகளை வீசி அனுமனை அதற்குள் சிக்க வைக்க முயன்றாள்.
அவனோ கைகளை லாவகமாகப் பற்றி, ஒன்று சேர்த்து முறுக்கி அவளை சின்னா பின்னமாக்கிட நினைத்தான். ஆனால் அரக்கியின் மார்பில் உதைத்து கீழே தள்ளினான். பெரிதாக ஓலமிட்டு அலறியபடி, பிரமாண்டமான மலை குடை சாய்வது போல விழுந்தாள் மாதேவி.
அடியாமுன்னம் அம்கை அனைத்தும் ஒரு
கையால்
பிடியா என்னே பெண் இவள் கொல்லின்
பிழைஎன்னா
ஒடியா நெஞ்சத்து ஓர் அடிகொண்டான்
உயிரோடும்
இடி ஏறு உண்ட மால் வரைபோல் மண்ணிடை
வீழ்ந்தாள்
-கம்பர்
பிறகு தனக்கு காவல் புரியும் பணியை வழங்கிய பிரம்மாவை நினைத்துக் கொண்டாள் மாதேவி. அப்பணியும் ஒரு வானரத்தால்தான் முடிவுக்கு வரும் என்று அவர் சொன்னதையும் சிந்தித்தாள். உடனே அனுமனிடமே தன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள். 'ஐயனே நீ யாரோ, எவரோ நான் அறியேன்.
ஆனால் உலகங்களைப் படைக்கும் பிரம்மாவின் ஆணையால் இலங்கையைக் காவல் காத்து வருகிறேன். என் பெயர் இலங்கை மாதேவி'' என்றாள்.
அனுமன் தான் யார் என்பதை சொல்ல விரும்பவில்லை. அவனுடைய நோக்கம் ராமனின் துாதனாக ராவணனைச் சந்தித்து சீதையை விடுவிக்கச் சொல்ல வேண்டும், அவ்வளவுதான். இடையில் வரும் யாரையும் பொருட்படுத்த அனுமன் விரும்பவில்லை. யாரும் எதிர்த்தால் அவர்களை விலக்கி, தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ஒருவேளை இப்படி இலங்கை மாதேவியை வீழ்த்தியது, அடுத்தடுத்து அனுமன் பல அரக்கர்களைப் பந்தாட வேண்டியிருக்கும் என்ற எதிர்வரும் சம்பவங்களின் ஒத்திகையோ?
பிரம்மாவிடம் வரங்கள் பல பெற்றிருக்கிறான் ராவணன். ஆனால் ஒருமுறை வருணனின் மகளான புஞ்சிகஸ்தலையை, அவளின் விருப்பத்திற்கு மாறாக அடைய ராவணன் முயற்சித்தான். பிரம்மா அவனுடைய அடாத செயலைக் கண்டித்து தடுத்தார். அத்துடன் 'எந்தப் பெண்ணையும் விருப்பம் இன்றி தீண்டினால் இறப்பு உண்டாகும்' என்றும் சபித்தார். இப்படி வரமும், சாபமும் கொடுத்த
பிரம்மா அவனது அரண்மனையைக்
காவல் புரியும் பொறுப்பை இலங்கை மாதேவியிடம் அளித்தார்.
அவள் தொடர்ந்து அனுமனிடம், 'பிரம்மன் என்னைத் தேர்ந்தெடுத்தது எதனால் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஓர் அரக்கனின் அரண்மனைக்கு அதே அரக்க சுபாவம் கொண்டவர் காவல்காரராகப் பணியாற்றுவதுதானே பொருத்தம்? ராவணனின் கொடுமைகளை நானும் பார்த்துதான் வருகிறேன். நானும் அசுர குணம் கொண்டவள்தான் என்றாலும் அச்செயல்களில் எனக்குச் சம்மதமில்லை. ஆனால் யாராலும் அவனிடம் தர்மம், நியாயத்தை பேச இயலாது என்னும் போது காவலாளியான என்னால் மட்டும் முடியுமா?
'இது போன்ற சம்பவங்கள் ராவணனுக்கு எச்சரிக்கையாக அமையட்டும் என பிரம்மா நினைக்கிறார் போலிருக்கிறது. அதனால்தான் என்னை நியமித்திருக்கிறார். அதோடு இங்கிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் எனக் கேட்டதற்கு ஒரு வானரம் உன்னை சந்தித்து உன் தடையை எளிதாக உடைத்து உன்னையும் தாக்கி வீழ்த்தும். அச்சமயமே சுதந்திரம் அடைவாய்' என சொல்லியிருந்தார். அவர் சொன்னபடியே நடந்தது. உனக்கு நன்றி'' என அனுமனை வணங்கினாள். அதன் பின் அவள் இலங்கையில் இருந்து பிரம்மலோகம் புறப்பட்டாள்.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695