ADDED : ஜன 01, 2025 01:09 PM

வேலுடையான்பட்டு
அன்று கார்த்திகை விரதம். அன்று மதியம் முருகனுக்கு பூஜை செய்து விட்டு பாட்டி, யுகன், தேவந்தி, அமுதன் மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சாப்பாட்டை சிந்தாமல் சாப்பிட வேண்டும் என தேவந்தி அமுதனுக்கு அறிவுறுத்தினாள். “ஆமா, இப்படி சாப்பாட கீழ சிந்திட்டே இருந்தா அரோகரா தான்னு பாட்டி கூட சொல்லி இருக்காங்க''என தன் மழலை மொழியில் தேவந்தியிடம் சொன்னான் அமுதன்.
“அரோகரா' என்பது 'அர ஹரோ ஹரா' என்பதன் சுருக்கம் தான். இதற்கு அர்த்தம் தெரியுமா? தெய்வமே... துன்பங்களை நீக்கி நற்கதியை அருள்வாயாக என்பது. முன்பெல்லாம் சிவனடியார்கள் இதனை சொல்வது தான் வழக்கம்.
ஒருமுறை ஞானசம்பந்தர் பல்லக்கில் பயணம் செய்யும்போது அவரை சுமந்து வந்தவர்கள் களைப்பை மறக்க 'ஏலேலோ ஏலேலோ' என பாடியபடி வந்தனர். இதைக் கேட்ட ஞானசம்பந்தர் பொருள் இல்லாத ஒன்றை சொல்வதை விட பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என 'அர ஹரோ ஹரா' என்பதை பல்லக்கு துாக்கிகளுக்கு கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு அர ஹரோ ஹரா என்ற வழக்கம் ஏற்பட்டது. காலப்போக்கில் முருகன் அடியவர்கள் சொல்லத் தொடங்கினர். ' வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' எனச் சொல்லி வந்ததால் இச்சொற்கள் முருகப்பெருமானுடன் இணைந்து விட்டன.
வெற்றிவேலை கொண்ட முருகா... எங்கள் துன்பங்களை போக்கி நன்மை தருவாயாக என உரிமையோடு முருகனிடம் முறையிடுவது தான் இதன் பொருள். புரியுதா அமுதா” என்றார் பாட்டி.
“அமுதனுக்கு புரியுதோ இல்லயோ எங்களுக்கு புரிஞ்சது பாட்டி. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரான்னு இனிமே ஜோரா சொல்லணும் அமுதா” என்றான் யுகன்.
“அவனை சாப்பிட விடு யுகா. சாப்பிடும் போது பேசாதே”
“சரி பாட்டி போனவாரம் வேலும் பட்டும்னு சேர்ந்து இருக்குற ஊர் பெயரை கண்டுபிடிக்க சொன்னியே. ஆனா நீ சாப்பிட்டு சொன்னா போதும்'' என்றான் யுகன். வடை பாயாசம் என திருப்தியாக சாப்பிட்டு தேவந்தியின் கைப்பக்குவத்தை பாராட்டியபடி எழுந்தார் பாட்டி.
“உனக்கு நெய்வேலி தெரியும் தானே யுகா”
“அங்க தானே பழுப்பு நிலக்கரி எடுக்குறாங்க. என் பிரண்டு தர்மராஜ் அங்கதான் என்.எல்.சி.,யில வேலை செய்றான்''
“அதே தான். அங்க தான் முருகன் வேலை ஊன்றி சண்முக தீர்த்தத்தை உருவாக்கினார். கடலுார் மாவட்டம் நெய்வேலியில் இருந்து ஒரு கி.மீ., துாரம். சென்னை - கும்பகோணம் சாலையில் பண்ருட்டி, வடலுாருக்கும் இடையில் உள்ள வடக்குத்து என்ற ஊரிலிருந்து போனால் 3 கி.மீ., துாரத்தில் வேலுடையான்பட்டுக் கோயில்”
“வேலும் பட்டும் இணைந்தது இங்குதானா”
''ஆமா. அழகான ஊர். பக்தர்கள் அதிகரிக்க அதிகரிக்க மலைகளைத் தாண்டி சமவெளி பகுதிகளிலும் கோயில்கள் உருவாச்சு. அதில் ஒன்னு தான் வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் கோயில். புராண காலத்தில் இப்பகுதி காடாக இருந்தது.
அதன் அடையாளமா கோயிலைச் சுற்றி ஆல மரங்கள் நிறைய உள்ளன. வள்ளியை திருமணம் புரிய வள்ளி மலைக்கு வந்து விட்ட சமயத்தில், தேவர்கள் முருகனைத் தேடி பூலோகம் வந்தனர். இடும்பன், வீரன், அய்யனார் சூழ்ந்திருக்க சோலையின் நடுவே ஜோதி வடிவமாக கண்டனர். அதில் நிறைவு ஏற்படாததால் மீண்டும் வேண்ட, வள்ளி தெய்வானையுடன் கையில் வில்லும் அம்பும் தாங்கியபடி காட்சியளித்தார். அதனால் இந்த கோயில் முதலில் வில்லுடையான் பட்டு எனப்பட்டது. பின்னர் வேலை ஊன்றி சண்முக தீர்த்தத்தை இங்கு உருவாக்க வேலுடையான்பட்டு என மாறியது''
''இப்படித்தான் வில்லுடையான்பட்டு வேலுடையான்பட்டா மாறிப் போச்சா?”
“காலப்போக்கில் கோயில் மண்ணுக்குள் புதைந்தது. 13ம் நுாற்றாண்டில் இந்தப்பகுதியை ஆட்சி செய்த சித்திர காடன் என்னும் பல்லவ மன்னர் தற்போதுள்ள கோயிலைக் கட்டினார். மன்னரின் பசுக்கள், இந்தப் பகுதியில் மேய்வது வழக்கம். ஆனால் அரண்மனைக்கு திரும்பியதும் பால் கொடுக்காமல் இருந்தன. இதற்கான காரணத்தை அறிய பசுக்களை பின் தொடர்ந்தார் மன்னர். காட்டில் ஒரு புதருக்கு அருகில் பசுக்கள் தானாக பாலை சொரிவதைக் கண்டார். அங்கு சிலை வடிவில் முருகப்பெருமான் காட்சியளித்தார். அன்றிரவு மன்னரின் கனவில் அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டவும் உத்தரவிட்டார் முருகன். இப்படி உருவானது தான் வேலுடையான்பட்டு கோயில். இங்கு மூலவர் மண்ணில் இருந்து சுயம்புவாக தோன்றியவர் என்றால் உற்ஸவரோ கடலில் இருந்து கிடைத்தவர்”
“சபாஷ்... சரியான போட்டி?” எனச் சிரித்தான் யுகன்.
“முருகனுக்கு முருகனே போட்டியா! சரி தான் போ!” என சிரித்த பாட்டி, “இங்குள்ள உற்ஸவர் சிலை, கடலில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் எப்போது கிடைச்சது என்பதற்கான ஆதாரம் இல்லை. கிழக்கு நோக்கியுள்ள இந்தக் கோயில் தெய்வானை திருமண சிற்பம் தாங்கிய தோரண வாயிலுடன் இருக்கு. முகப்பு மண்டபத்தில் ஐந்து சூலாயுதங்கள், பலிபீடம், கொடி மரம், மயில் சிற்பங்கள் உள்ளன. மகா மண்டபத்தில் விநாயகர், ஆதிலிங்கம், தண்டாயுதபாணி சன்னதிகள் உள்ளனர். கருவறையை சுற்றி வரும் போது விநாயகர், விசாலாட்சி, விஸ்வநாதர், அகத்தியர், லோபமுத்ரா, துர்கை, சனிபகவான், ஐயப்பன் சன்னதிகளை பார்க்கலாம். கருவறையில் சுயம்பு மூலவர் வள்ளி தெய்வானையுடன் சிவசுப்பிரமணியராக அருள்புரிகிறார்.
“அது சரி, யார் இந்த லோபமுத்ரா? புதுசா இருக்கே?''என இழுத்தான் யுகன்.
''அகத்தியரின் மனைவி. கோயிலின் வாசலை ஒட்டி வலது புறம் நவகிரக சன்னதியும் தல விருட்சங்களும் தேர் வடிவ வசந்த மண்டபமும் இருக்கு. கோயிலுக்கு வெளியே சண்முக தீர்த்தம் குளமாக உள்ளது. அந்த குளத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கேன். அவ்வளவு பெருசு. இன்னொரு விஷயம் தெரியுமா? கோயிலை நெய்வேலி என்எல்சி நிர்வாகம் தான் நிர்வகிக்கிறது. கோயில் மிகத் துாய்மையாக இருக்கும். இப்பகுதி மக்களுக்கு இந்த முருகப்பெருமானே குலதெய்வம். பங்குனி உத்திரம் ரொம்ப விசேஷம்”
“சரி பாட்டி, நம்ம அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியிருக்காரா?”
''ஆமா, 'கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கிக் கிளைஞர் கதறி அழ' எனத் தொடங்கும் பாடலைப் பாடியிருக்கார்.”
“திருப்புகழை நம்ம அமுதனுக்கு ஒவ்வொன்னா சொல்லித் தரணும். ம்... முருகனை வளர்க்க ஆறு கார்த்திகை பெண்கள் இருந்தாங்க. அப்படி அமுதனை வளர்க்க ஆள் இருந்தா நல்லா இருக்கும். திருப்புகழ் எல்லா பாடல்களையும் சொல்லிக் கொடுத்துடுவாங்க. இதையெல்லாம் யோசிச்சா நல்லா தான் இருக்கு. ஆனா என்ன பண்றது” என்று சொல்லி சிரித்தான் யுகன்
“கார்த்திகை பெண்களின் பெயர்கள் முதலில் தெரிஞ்சுக்கோ... அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்ற ஆறு பெண்கள் தான் முருகனை வளர்த்தவர்கள். இந்த ஆறு பேரின் ஒரே வடிவமாக நமக்கு தேவந்தி இருக்காளே. அப்புறம் என்ன குறை” என யுகனின் கன்னத்தை திருகினாள் பாட்டி.
“அம்மா... வலிக்குது விடு” என்றவன் அடுத்த வாரம் மலையா... சமதளமா... எங்கே போகப் போறோம் பாட்டி?” எனக் கேட்டான் யுகன்.
“பேனா பேப்பர் எடுத்துட்டு போக வேண்டிய முருகன் கோயில் எது? என விடுகதை சொல்லி விட்டு விருட்டென எழுந்து சென்றார் பாட்டி. கன்னத்தை தடவியபடி யோசிக்கத் தொடங்கினான் யுகன்.
-இன்னும் இனிக்கும்
பவித்ரா நந்தகுமார்
94430 06882