Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பகவத்கீதையும் திருக்குறளும் - 32

பகவத்கீதையும் திருக்குறளும் - 32

பகவத்கீதையும் திருக்குறளும் - 32

பகவத்கீதையும் திருக்குறளும் - 32

ADDED : ஜன 01, 2025 01:10 PM


Google News
Latest Tamil News
முக்தி என்றால்...

முன்பு நம் ஊருக்கு வந்தாரே சாது ஒருத்தர். அவர் முக்தி அடைந்ததாகச் சொல்றாங்களே... அப்படின்னா என்ன தாத்தா எனக் கேட்டான்.

''உனக்கு முன்பே சொல்லியிருக்கேன். உடல் வேறு ஆத்மா வேறு. இறந்து போன உங்க தாத்தா இப்ப எங்க இருப்பாருன்னு நீ கேட்டதுக்கு வேறு ஒரு உடம்புல அவர் இருப்பாருன்னு சொன்னேனே...

எப்போ ஒரு ஆத்மா கடவுளின் திருவடியில் சேர்கிறதோ அப்போது அந்த ஆத்மா முக்தி பெற்றதாக அர்த்தம். அந்த ஆத்மாவுக்கு அதன்பின் பிறப்போ, உடம்போ கிடையாது. அந்த ஆத்மாவின் கடமைகள் அனைத்தும் முடிந்து விட்டது. அந்த சாது இந்த உலகத்துல செய்யறதுக்கு எந்த வேலையும் இல்லை. அதனால கடவுளின் திருவடியை அடைந்து விட்டார்.

துறவிகள், சாதுக்களும் இந்த பூமியில் இருப்பதற்கு காரணமே நம்மைப் போல உள்ள சாமானியர்களும் முக்தி அடையும் வழிமுறைகளை சொல்வதற்காகத்தான். கிருஷ்ணர் 10வது அத்தியாயம் ஏழாவது வரியில்,

ஏதாம் விபூ4திம் யோக³ம் ச மம யோ வேத்தி தத்த்வத: |

ஸோ5விகம்பேந யோகே³ந யுஜ்யதே நாத்ர ஸம்ஸ²ய|| 10 - 7

எனச் சொல்கிறார்.

'என் தெய்வீக சக்திகளையும் அறிந்தவர்கள் பக்தியின் மூலம் என்னுடன் ஐக்கியமாகிறார்கள். இதில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம். என்கிறார் கிருஷ்ணர்.

இதே கருத்தை திருவள்ளுவர் 356 வது குறளில்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி

கற்க வேண்டியதை கற்று மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள், மீண்டும் பிறக்க மாட்டார்கள். 'கற்க வேண்டியவற்றைக் கற்று' என திருவள்ளுவர் சொல்வது பக்தியோகத்தை குறிக்கும் என்றார் தாத்தா.

''தாத்தா... படிக்க வேண்டியதை படி என்று தானே திருவள்ளுவர் சொல்கிறார். பக்தி எனச் சொல்லவில்லையே...'' என கந்தன் சந்தேகம் கேட்டான். முக்தி அடைவது பற்றி அறிய விரும்பினால் பகவத் கீதையை ஆழ்ந்து படி. திருவள்ளுவரும் மறைபொருளாக அதையே குறிப்பிடுகிறார்.



-தொடரும்

எல்.ராதிகா

97894 50554





      Our Apps Available On




      Dinamalar

      Follow us