ADDED : ஜன 09, 2025 02:55 PM

'உண்மையைச் சொன்னால் கோபம் வருகிறது; பொய்யைச் சொன்னால் சந்தோஷம் வருகிறது'
இப்படி சொல்பவர் யார் தெரியுமா?
சாட்சாத் காஞ்சி மஹாபெரியவர் தான்.
என்னது... ஜகத்குருவா இப்படிச் சொல்கிறார் என அதிர்ச்சியாக வேண்டாம்.
படித்து பாருங்கள். எதற்காக இப்படி சொல்கிறார் என்பது புரியும்.
சரஸ்வதி கடாட்சம் தங்களுக்கு அதிகம் இருப்பதாக எல்லோரும் நினைக்கின்றனர். அதாவது புத்திசாலியாக காட்டிக் கொள்ள ஆசைப்படுகின்றனர். ஆனால் நல்ல புத்தி வேண்டும் என சரஸ்வதியிடம் கேட்பதாகத் தெரியவில்லை.
சாமர்த்தியம், சாதுர்யமாக இருந்தால் போதும். சுலபமாக பிறரை ஏமாற்றலாம் என நினைக்கிறார்கள். புத்திசாலித்தனம் என்றாலே சாமர்த்தியம் தான் என கருதுகிறார்கள்.
உண்மையான புத்திசாலித்தனம் எது தெரியுமா?
1. ஞானம் (கடவுளை பற்றிய தெளிந்த அறிவு),
2. விவேகம் (உலகம் நிலையற்றது என அறிதல்).
படிக்காதவன் கூடத் தன்னைப் புத்திசாலியாகக் காட்ட விரும்புகிறான். ஒருவனிடம் பணம் எவ்வளவு இருந்தாலும் அது குறித்து பேச அவன் விரும்புவதில்லை. பணம், சொத்து வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக ஏழை போல நடிக்கவும் செய்கிறான்.
பணம் இன்னும் வேண்டும் என ஆசைப்படவும் செய்கிறான். தானே ரொம்ப அழகு என கருதுவதால் தன்னை அலங்காரம் செய்து கொள்கிறான்.
புத்தி, பணம், அழகு எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு இந்த வாழ்க்கையை நாம் ஓட்டுகிறோம். ஆனால் திருப்தியுடன் வாழ்ந்தோமா... இல்லையே. எப்போதும் கவலையில் மூழ்கிக் கிடக்கிறோம். ஒன்றை விட்டால் இன்னொன்றுக்கு மனம் தாவிக் கொண்டே இருக்கிறது.
நிம்மதி, அமைதியுடன் யாரும் வாழ்வதாகத் தெரியவில்லை.
பணம், படிப்பு, அழகு என்பது மாயை. இந்த அறிவு தாமதமாகத்தான் நமக்கு தெரியும்.
நிலையற்ற இவற்றுக்காக ஏங்கும் மனதில் 'வேண்டாம்' என்ற ஞானம் பிறக்க வேண்டும். அந்நிலையில் அம்பிகை அருளையும் பெற்றால் எல்லாம் இன்ப மயமாகி விடும்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று. உன் கஷ்டம் தீரும்.
* குலதெய்வத்துக்குத் தான் முதல் முடிக்காணிக்கை, காதுகுத்து.
* நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும்.
* ஆயிரம் தெய்வம் இருந்தாலும் குலதெய்வத்துக்கு ஈடு இல்லை.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப்
போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com