Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/தோரண கணபதியே என் முன்னே தோன்றிடுக

தோரண கணபதியே என் முன்னே தோன்றிடுக

தோரண கணபதியே என் முன்னே தோன்றிடுக

தோரண கணபதியே என் முன்னே தோன்றிடுக

ADDED : செப் 10, 2023 06:09 PM


Google News
Latest Tamil News
கடன் பிரச்னையா கவலை வேண்டாம். கீழ்க்கண்ட பாடல்களை விநாயகர் முன் பாடுங்கள்.

சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்

முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்

காரணனே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே

தோரண கணபதியே தோன்றிடுக என் கண்முன்னே.

திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்

திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளி இன்றி நிற்கின்றோம்

கடன் பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே

உடன் வந்தே உபாயங்கள் காட்டிவாய் கரிமுகவாய்

பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்

கருணைச் சொல் தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே

கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்

விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக.

மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்

காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதி சதுர்த்தியிலும்

சேரும் இரவி காலத்திலும் மலர்துாவிப் படைத்திட்டோம்

தோரணனே செவ்வேளின் மூத்தவனே செவி சாய்ப்பாய்.

பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா

தோரணவாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே

சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே

எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே

சந்திரன் ஒளி கரைத்துச் சரித்திரம் படைத்தது போல

இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே

குன்றத்துார் சக்தி பீடமதில் கடன் தீர்க் கணநாதனாய்க்

கன்று முன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us