Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/வெற்றி உறுதி

வெற்றி உறுதி

வெற்றி உறுதி

வெற்றி உறுதி

ADDED : செப் 10, 2023 06:16 PM


Google News
Latest Tamil News
செப்.11 நினைவுநாள்

* மனதில் நம்பிக்கை இருந்தால் வெற்றி உறுதி.

* அறிவும் துணிவும் சேர்ந்ததுதான் தைரியம்.

* போனதை நினைத்து வருந்தாதே. நடக்க இருப்பதை பற்றி யோசி.

* மன்னிக்கும் தன்மை நல்லவர்களிடம் இருக்கும்.

* புதிய முயற்சி செய்யும்போது தவறு வருவது இயல்பு. அதை திருத்திக்கொள்.

* நல்ல மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விட கொடுமையானது.

* மனதை நல்வழிப்படுத்தும் சிறந்த வழியே கடவுள் வழிபாடு.

* ஆற்றில் மிதக்கும் கட்டை போல மனதை லேசாக வைத்திரு.

* உன்னை நீயே ஆட்சி செய்ய கற்றுக் கொண்டால் வாழ்வில் உயரலாம்.

* செல்வம் தேட பல வழிகள் இருந்தாலும், அவரவர் தகுதியறிந்து தேடுவதே நல்லது.

* பணத்தைப் போல நேரமும் விலை மதிப்பு கொண்டது. அதை வீணாக்காதே.

* பெரிய கஷ்டங்களை அனுபவித்த பிறகே சிறிய உண்மைகள் தெரியும்.

* உடலை உறுதியாக மாற்று. உடல் வசப்படாவிட்டால் வாழ்வு நரகமாகும்.

* அறியாமை என்பது விஷப்பூச்சி. அது மனதில் புகுந்தால் இன்பம் மறையும்.

* நீ யார் என்பதை உணர்ந்தால் உனக்கு நீயே நண்பன்தான்.

அழைக்கிறார் பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us