Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : ஜூலை 12, 2024 08:17 AM


Google News
Latest Tamil News
* விநாயகருக்கு மா, பலா, வாழைப்பழம் வைத்து வழிபட விருப்பம் நிறைவேறும்.

* மும்மூர்த்திகள் செய்யும் தொழில்கள்

படைத்தல் - பிரம்மா

காத்தல் - மகாவிஷ்ணு

அழித்தல் - சிவபெருமான்

* சிவபெருமான் மீது தேவாரம் பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.

* சிவபெருமானால் 'அம்மா' என அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் இவர் மட்டும் அமர்ந்த நிலையில் இருப்பார்.

* பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் மகாவிஷ்ணுவின் முதல் அடியவர்கள். இவர்களை முதலாழ்வார்கள் என்பர்.

* முருகப்பெருமானிடம் உபதேசம் பெற்றவர்கள் மூவர். தந்தையான சிவபெருமான், முனிவரான அகத்தியர், பக்தரான அருணகிரிநாதர்.

* சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜ சுவாமிகள், சியாமளா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர்.

* ஆதி மும்மூர்த்திகள் சீர்காழியைச் சேர்ந்த முத்துத்தாண்டவர், அருணாசலக்கவிராயர், மாரிமுத்தாபிள்ளை.

* சிவபெருமானின் மூன்று கண்களாக போற்றப்படும் நுால்கள்

1. வலதுகண்(சூரியன்) சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம்

2. இடது கண்(சந்திரன்) பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம்

3. நெற்றிக்கண்(அக்னி) கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம்.

* ஆன்மிகத்தில் உயர்வு பெற மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் துாய்மையுடன் இருக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us