Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

ADDED : ஜூலை 12, 2024 08:21 AM


Google News
Latest Tamil News
ஜூலை 12 ஆனி 28: முகூர்த்த நாள். குமாரசஷ்டி. ஆனி உத்திர தரிசனம். நடராஜர் அபிேஷகம். ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் தண்டியலில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வானகம். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனம்.

ஜூலை 13 ஆனி 29: அழகர்கோவில் கள்ளழகர், வடமதுரை சவுந்திரராஜப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம். ராமநாதபுரம் கோதண்டராமசாமி குதிரை வாகனம். திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமான், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர் திருமஞ்சனம்.

ஜூலை 14 ஆனி 30: சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகனம். திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம்.

ஜூலை 15 ஆனி 31: உபேந்திர நவமி. வீரவநல்லுார் பூமிநாத சுவாமி தெப்பம். ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி தீர்த்தம். பெரியாழ்வார் திருநட்சத்திரம்.

ஜூலை 16 ஆனி 32: வடமதுரை சவுந்திரராஜப்பெருமாள் கருட வாகனம். அழகர்கோவில் கள்ளழகர் கஜேந்திர மோட்சம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் தங்க பூமாலை சூடியருளல்.

ஜூலை 17 ஆடி 1: ஏகாதசி விரதம். கோவர்த்தன விரதம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மதுரை கூடலழகர் புறப்பாடு.

ஜூலை 18 ஆடி 2:வாசுதேவ துவாதசி. சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம். கரிநாள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us