ADDED : மார் 25, 2015 10:46 AM
சுற்ற மெல்லாம் பின் தொடர தொல்கானம் அடைந்தவனே
அற்றவர்கட் கருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத் தென் கருமணியே
சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ!
பொருள்: சிறிய அன்னை கைகேயியிக்கு, தந்தை அளித்த வரத்திற்காக உறவினர்கள் பின் தொடர காட்டிற்குச் சென்றவனே! திக்கற்றவர்க்கு அருமருந்தாகத் துணை செய்பவனே! அயோத்தி நகரின் மன்னவனே! கற்றவர்கள் குடியிருக்கும் திருக்கண்ணபுரத்தில் வாழ்பவனே! ஸ்ரீராமச்சந்திரனே! உன்னை பாட்டுப்பாடி தூங்க வைக்கிறேன்.
குறிப்பு: நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வார் பாடியது.