Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : பிப் 28, 2020 01:02 PM


Google News
Latest Tamil News
நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணமும்

அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையைப்

பயனென்று கொண்டவர் பாவையராடவும் பாடவும் பொன்

சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

பொருள்: மூன்று கண்களை உடைய சிவனும், வேதங்களும், திருமாலும், பிரம்மாவும் போற்றி வணங்குகின்ற அபிராமி அன்னையே! உன் பாத கமலங்களை வணங்குவதே பிறவிப்பயன் என்று வாழ்பவர்கள் மேலானவர்கள். அவர்கள் ஆடல், பாடலுடன் மகிழ்ச்சியாக வாழும் புண்ணிய உலகில் தங்குவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us