Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : மார் 20, 2020 10:14 AM


Google News
Latest Tamil News
* குழந்தைகள் ஆர்வமுடன் படிக்க பரிகாரம் சொல்லுங்கள்.

ஆர். வனிதா, சிவகங்கை

திங்கள் அல்லது பவுர்ணமியன்று அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள். நவக்கிரகத்திலுள்ள புதன் பகவானுக்கு குழந்தையின் பெயரில் புதன்கிழமைதோறும் அர்ச்சனை செய்யுங்கள்.

* ஜாதகத்திலுள்ள கிரக தோஷம் ஆயுள் முழுவதும் நீடிக்குமா? பரிகாரம் என்ன?

எல்.கபில், திருப்பூர்

நீடிக்காது. தோஷமோ, யோகமோ குறிப்பிட்ட திசை, புத்தி காலத்தில் மட்டும் பலன் அளிக்கும். குறிப்பிட்ட திசை, புத்தி வராத பட்சத்தில் பொருட்படுத்த தேவையில்லை. தோஷத்திற்குரிய பரிகாரத்தை தேவையான நேரத்தில் செய்யுங்கள்.

* கோயிலில் நடை சாத்தியிருந்தாலும் வழிபடலாமா?

எம்.அரவிந்த், திருவள்ளூர்

நடை சாத்தியிருக்கும் நேரத்தில் வணங்குவது, விளக்கேற்றுவது, சன்னதியை வலம் வருவது கூடாது.

மடாதிபதிகள் நிறைய சொத்து வைத்திருக்கிறார்களே?

எஸ்.காயத்ரி, தேனி

மடத்தின் சொத்துக்கள் மூலம் கல்விச்சேவை, அன்னதானம், கோயில் பராமரிப்பு, மருத்துவ சேவை, சமூகப்பணிகளை மேற்கொள்கின்றனர். தர்மசிந்தனை உள்ளவர்களும் நிதியளிக்கின்றனர். சமூகத்திற்கு நன்மை நடந்தால் அதை வரவேற்க வேண்டும்.

* காது குத்தும் போது தாய்மாமன் மடியில் உட்கார்வது ஏன்?

எம்.சந்தோஷ், கடலுார்

தாயை 'அம்மா' என்கிறோம். அம்மாவின் உடன்பிறப்பு என்பதால் தாய்மாமனை 'அம்மான்' என்கிறோம். தாயும், தாய்மாமனும் ஒன்றே. தாய் பெற்றெடுக்கிறாள். தாய்மாமன் தன் பிள்ளைகளை சகோதரியின் பிள்ளைகளுக்கு சம்பந்தம் பேசுகிறார். இந்த உறவு நீடிக்க, குடும்ப ஒற்றுமைக்காக இப்பழக்கம் ஏற்பட்டது.

கொடி மரத்தில் எப்படி விழுந்து வணங்க வேண்டும்?

பி.ஸ்வேதா, சென்னை

தலை முதல் கால் வரையான எட்டு உறுப்புகள் ஆண்களுக்கும், தலை, முகம், கைகள், கால்கள், பாதம் ஆகிய ஐந்து உறுப்புகள் பெண்களுக்கும் தரையில் படுமாறு வடக்கு திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும்.

இரவில் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லலாமா?

எல்.மகதி, விழுப்புரம்

கூடாது. அதிகாலையில் சொல்லும் போது மந்திர ஒலி அதிர்வுகள், சூரிய ஆற்றலுடன் இணைந்து உடல், மனநலத்தைக் கொடுக்கும். இதைப் போல சுப்ரபாதமும் காலையில் தான் ஒலிக்க வேண்டும். மாலையில் ஒலிப்பதை தவிர்ப்பது நல்லது.

பெண்கள் அலங்கார உடையணிந்து கோயிலுக்கு வரலாமா?

கே.வசந்த், கள்ளக்குறிச்சி

பட்டு உடுத்தி, நகை அணிந்து கோயிலுக்கு வருவதில் தவறில்லை. அம்பாளுக்கே பட்டும், நகைகளும் அணிகிறோமே! அவரவர் தகுதிக்கேற்ப அலங்கரிப்பது தவறல்ல. கலாசாரத்துக்கு புறம்பான ஆடை அணியக் கூடாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us