Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : பிப் 20, 2020 12:16 PM


Google News
Latest Tamil News
* நம் நாடு நலமாக இருக்க என்ன வழி?

கே.பல்ராம், செங்கல்பட்டு

கோயில்களில் கூட்டுப்பிரார்த்தனை செய்வதால் சக்தி அதிகம் என அருளாளர்கள் சொல்வர். வீட்டு பூஜையிலும் நாடு நலம் பெற தினமும் வேண்டுங்கள். துன்பப்படுவோருக்கு பொருளுதவியைச் செய்யுங்கள்.

* கோயிலுக்கு சனீஸ்வரர் சிலை வாங்கித் தரலாமா?

எம்.கதிர், மதுரை

வாங்கித் தரலாம். ஆயுள் தொழிலுக்கு உரியவர் சனீஸ்வரர். சனீஸ்வரர் அருளால் நீண்ட ஆயுள், தொழில் வளம் அதிகரிக்கும். நீதி, நேர்மை எண்ணம் மேலோங்கும். சனிக்குரிய தெய்வமான ஐயப்பனின் அருள் கிடைக்கும்.

* சாப்பிடும் போது விளக்கு அணைந்தால் தொடர்ந்து சாப்பிடலாமா?

பி.கிரண், கள்ளக்குறிச்சி

இருட்டில் சாப்பிடக் கூடாது. அணைந்தால் மீண்டும் விளக்கு ஏற்றிய பின்னரே, சாப்பிட வேண்டும்.

* விஸ்வகர்மா படம் வாங்கினோம். அதில் எமனும் இடம் பெற்றிருக்கிறார். வீட்டில் பூஜிக்கலாமா?

எம்.கோபி, கோவை

எமனைக் கண்டு பயப்படத் தேவையில்லை. தர்மத்திற்கு கட்டுப்படுபவர் என்பதால் தான் அவரை 'எமதர்மன்' என அழைக்கிறோம். விஸ்வகர்மாவை வழிபட தொழிலில் லாபம், புத்திக் கூர்மை கிடைக்கும்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என திருமூலர் சொல்வதன் பொருள் என்ன?

எல்.சாய்ஸ்ரீ, சிவகாசி

கடவுள் ஒருவரே; நாம் அனைவரும் ஒரே குலம் என்பதை திருமந்திரம் மூலம் உலகிற்கு உணர்த்துகிறார். 'அன்பே சிவம்' என்னும் மேலான நிலைக்கு மனிதன் சென்றால் ஒன்றே குலம் என்பது சாத்தியமே!

காளியை எந்தநாளில் வழிபடுவது சிறப்பு?

ஆர்.திலோத்தமா, போத்தனுார்

ஞாயிறு, வெள்ளி, அஷ்டமி திதி, பவுர்ணமி, பரணி நட்சத்திர நாட்கள் உகந்தவை. ராகு காலத்தில் வழிபடுவது இன்னும் சிறப்பு.



நமசிவாய, நமச்சிவாய எது சரி?

பி.முகேஷ், சென்னை

தமிழ் இலக்கணப்படி 'நமச்சிவாய' வடமொழி இலக்கணப்படி, 'நம சிவாய' என்பது சரியானது.

திருமணத்திற்காக சிலர் பூக்கட்டி பார்க்கிறார்களே...சரியா?

ஆர்.ஆர்த்தி, தேனி

ஜாதகம் இல்லாதவர்கள் பூக்கட்டிப் பார்த்து திருமணம் நடத்தலாம். விரும்பிய முடிவு கிடைக்கும் வரை திரும்ப திரும்ப பார்க்கக் கூடாது. ஒரே முறையில் வரும் முடிவை ஏற்பதே சரி.



தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாட்கள் எவை?

டி..பவித்ரா, திண்டுக்கல்

தமிழ் மாதப்பிறப்பு, அமாவாசையும் ஏற்ற நாட்கள். காசி, ராமேஸ்வரம் போன்ற பிதுர் வழிபாட்டு தலங்களில் எல்லா நாட்களிலும் தர்ப்பணம் கொடுக்கலாம்.

துன்பத்தில் மனம் சஞ்சலப் படுகிறது. எப்படி மனதை தேற்றுவது?

எம்.சர்வேஷ், திண்டுக்கல்

இன்பத்தில் மகிழ்வது, துன்பத்தில் துவள்வது மனதின் இயல்பு. கவலைப்படுவதால் துன்பம் தீவிரமடையுமே தவிர தீர்வு கிடைக்காது. தன்னம்பிக்கை மிக்கவர்களோடு பழகவும், நல்ல நுால்களைப் படிக்கவும் செய்யுங்கள். திங்கட்கிழமை, (அல்லது) பவுர்ணமியன்று கோயிலுக்கு செல்லுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us