ADDED : பிப் 20, 2020 12:18 PM

தந்தையாய் உலகுக்கோர் தத்துவன் மெய்த் தவத்தோர்க்குப்
பந்தமாயின பெருமான் பரிசுடை அவர் திருவடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
எந்தை யென்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே.
பொருள்: உலக உயிர்களுக்குத் தந்தையாகத் திகழ்பவனே! ஒப்பற்ற தத்துவமாக இருப்பவனே! உண்மைத் தவவாழ்வில் ஈடுபடும் ஞானிகள் விரும்பும் தலைவனே! அருள் என்னும் பரிசை அடியாருக்கு வழங்கும் திருவடி கொண்டவனே! குளிர்ச்சியும், நீர்வளமும் கொண்ட திருவானைக்காவில் அருளும் ஆதிசிவனே! என உம்மை போற்றும் என்னை ஆட்கொள்வீராக.