Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : ஜூன் 14, 2024 12:51 PM


Google News
Latest Tamil News
கே.ராதா, அருமநல்லுார், கன்னியாகுமரி.

*நான் மீண்டும் மீண்டும் ஏமாறுகிறேன். தீர்வு என்ன?

விழிப்புடன் பழகுங்கள். சரியான முறையில் திட்டமிடுங்கள். உங்கள் முயற்சியில் எங்கோ தவறு இருக்கிறது.

வி.அமுதா, கரோல்பார்க், டில்லி.

*சுவாமி சிலைகளை ஜலவாசம், தான்யவாசத்தில் வைப்பது ஏன்?

சாதாரண கல் செதுக்கியபின் அது சிலையாக மாறுகிறது. ஜலவாசம், தான்ய வாசத்தால் அது தெய்வீக சக்தி பெறுகிறது.

டி.அவந்திகா, சோழவந்தான், மதுரை.

*கோயிலில் கொடுத்த பூமாலையை வீட்டிலுள்ள சுவாமி படத்திற்கு அணிவிக்கலாமா?

கூடாது. மனிதருக்கு அணிவித்த மாலையை வீட்டிலுள்ள சுவாமிக்கு அணிவிக்கக் கூடாது.

கே.விக்னேஷ், கம்பம், தேனி.

*கொடிமரம், பலிபீடம் இவற்றின் நடுவே செல்லக்கூடாதா...

மூலஸ்தானம் முதல் பலிபீடம் வரையுள்ள பகுதி, கடவுளின் தலை முதல் தொப்புள் வரையாகும். அதனால் குறுக்கே செல்லக் கூடாது.

எம்.சுந்தர், திருநாவலுார், விழுப்புரம்.

*திதியன்று வாஸ்து பூஜை நடத்தலாமா?

நடத்தலாம். ஆனால் திதியன்று வாஸ்து பூஜை செய்வதை விட வேறொரு நாளில் நடத்தலாமே.

எஸ்.திவ்யா, கேளம்பாக்கம், சென்னை.

*விரதமிருக்கும் நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

விரதமிருக்கும் நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தல், சவரம், முடி, நகம் வெட்டுதல் கூடாது.

எல்.மகாதேவன், அன்னுார், கோயம்புத்துார்.

*வீட்டில் வில்வமரம் வளர்க்கலாமா?

வில்வம், துளசி போன்ற பூஜைக்குரிய செடிகளை வீட்டில் வளர்க்கலாம்.

கே.மாலினி, மல்லேஸ்வரம், பெங்களூரு.

*ஒருவரின் செயலுக்கு ஏற்றபடிதான் சொர்க்கம், நரகம் கிடைக்குமா?

ஆம். செய்த புண்ணியம், பாவத்திற்கேற்ப சொர்க்கம், நரகம் கிடைக்கும்.

எம்.பவித்ரா, குற்றாலம், தென்காசி.

*திருவிடைமருதுார் (தஞ்சை) கோயிலில் உள்ளே போன வழியில் வெளியே வரக் கூடாதா...

மன்னர் ஒருவரை பிரம்மஹத்தி (கொலைப்பாவம்) தோஷம் துரத்த, அவர் இங்குள்ள சிவனை சரணடைந்தார். மன்னரை பிடிப்பதற்காக தோஷம் காத்திருந்ததால் வேறு வாசல் வழியே மன்னர் திரும்பினார். அதனடிப்படையில் இது பின்பற்றப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us