ADDED : டிச 22, 2023 04:53 PM

ஆங்கில நாவல்களில் வரும் துப்பறியும் கதாபாத்திரம் ஷெர்லாக் ஹோம். இவரைக் கதாநாயகனாகக் கொண்டு நாவல்களை எழுதியவர் சர். ஆர்தர் கேனன்டாயில். அவருக்கு 12 நண்பர்கள் இருந்தனர். ஒருமுறை வேடிக்கையாக 12 பேருக்கும் ஒரு மொட்டை தந்தி அனுப்பினார் டாயில். அதில், “உங்கள் ரகசியங்கள் அம்பலமாகப் போகிறது. தப்பி விடுங்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார். தந்தி கிடைத்த 24 மணி நேரத்திற்குள், நண்பர்கள் நாட்டை விட்டு ஓடினர். ஏனெனில் அவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டிருந்ததால் பயத்தில் ஓடிவிட்டனர். தனது நண்பர்களை ஒழுக்கமானவர்களாக மாற்ற இதைத் தவிர வேறு வழி அவருக்குத் தெரியவில்லை. பாவச்செயல்களில் இருந்து அவர்களை மீட்க இந்த நடவடிக்கையை டாயில் எடுத்தார். பாவச் செயல் செய்தால் நிம்மதி இழப்பீர்கள்.