ADDED : டிச 22, 2023 04:52 PM
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விபத்து நடக்கிறது. மோதுகின்ற இரு வாகனத்திலும் வந்தவர்களின் உயிர்ச்சேதத்திற்கு பொறுப்பாளி யார் எனக் கேட்டால், ஓட்டுனர் தான் என நினைப்போம். ஆம், அது தான் உண்மை. ஒரு நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை நேர்மையாக வழிநடத்தும் மேலாளருக்கு எத்தகைய பொறுப்பு இருக்கிறதோ அதைப்போல பயணியரை குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்பாக சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புடன் ஓட்டுனர் செயல்படுவது அவசியம்.