ADDED : பிப் 13, 2025 12:05 PM

டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் ஆர்தர் ராபர்ட் ஆஷ். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். இதய அறுவை சிகிச்சைக்காக இவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. அதில் கிருமிகள் இருந்ததால் எய்ட்ஸ் நோயாளி ஆனார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத தங்களுக்கா இந்த நிலை ஏற்பட்டது என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா...
500 லட்சம் பேர் டென்னிஸ் விளையாடுகிறார்கள்.
50 லட்சம் பேர் ஆர்வமுடன் அதை கற்றுக்கொள்கிறார்கள்.
5 லட்சம் பேர் தொழில் முறைக்கு முன்னேறுகிறார்கள்.
50,000 பேர் சர்க்யூட் லெவலுக்கு முன்னேறுகிறார்கள்.
5000 பேர் தான் கிராண்ட் ஸ்லாம் லெவலுக்கு செல்கிறார்கள்.
50 பேர் தான் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
4 பேர் தான் அரையிறுதிக்கு தகுதி பெறுகிறார்கள்.
2 பேர் தான் இறுதிப்போட்டியில் நுழைகிறார்கள்.
அதில் ஒருவரே வெற்றி பெறுகிறார்.
இப்படி பெயர், புகழ் பெற்ற போது 'என்னை தேர்வு செய்தது ஏன்' என நான் கேட்டதில்லை.
அதைப் போலத் தான் எய்ட்ஸ் நோயும். இன்பம், துன்பத்தை சமமாக கருதுவதால் ஆண்டவரிடம் இது பற்றி கேட்க மாட்டேன்'' என்றார்.