ADDED : பிப் 20, 2025 08:42 AM
மலை கிராமமான ஒஹ்ல் முழுவதும் நோய் பரவியது. கிராமத்தை விட்டு வெளியேறி வேறிடத்திற்கு செல்ல மக்கள் தயாராயினர். அப்பகுதிக்கு வந்த போதகர் ஒருவர் மருத்துவம் அறிந்திருந்தார். ''உங்களில் யாராவது ஒருவர் தேவ ஊழியத்திற்கு என்னுடன் வர தயாரானால் நோயை நான் குணப்படுத்துகிறேன்'' என்றார்.
மக்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் சிறுவன் ஒருவன், 'ஐயா... நான் வருகிறேன்' என்றான். சிறுவனைப் பாராட்டிய போதகர் மருந்து கொடுத்து நோயை போக்கினார். எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என வாழ்பவனே உத்தமன் என்கிறது நீதிமொழி.