Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/யாரோ... இவர் யாரோ...

யாரோ... இவர் யாரோ...

யாரோ... இவர் யாரோ...

யாரோ... இவர் யாரோ...

ADDED : மார் 22, 2024 09:29 AM


Google News
'உங்களின் முன்பு அமர்ந்திருந்திருக்கும் இருவரில் யார் மேலாளர், யார் பணியாளர் எனக் கண்டுபிடித்தால் வேலைவாய்ப்பு தரப்படும்' என்றார் அதிகாரி. நேர்முகத் தேர்வுக்காக வந்திருந்த எட்வின் இதைக் கேட்டுத் திகைத்தான். காரணம் இருவரும் நிறம், உயரம், உடல்வாகு, நடை, உடை என அனைத்திலும் ஒன்று போல காட்சியளித்தனர். பலமுறை முயற்சித்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. முடிவில் அறையை விட்டு வெளியேறினான்.

அப்போது இருவரில் முதலாமவர், 'நண்பரே! அடுத்த தேர்வில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்' என்றார். இரண்டாம் நபரோ தயக்கமுடன் நின்றார். எதுவும் பேசவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் எட்வின் முதல்நபர் மேலாளர், இரண்டாமானவர் பணியாளர் என பதிலளித்தார். நாம் எதிர்கொள்ளும் விதமே நாம் யார் என்பதை முடிவு செய்யும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us