ADDED : மார் 22, 2024 09:30 AM

மந்திரத்தால் மாங்காய் காய்க்குமா... ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா... என்ற பழமொழிகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 'ஒரே நாளில் புதிய மொழியைக் கற்கலாம்' என்று கூட விளம்பரம் பார்த்திருப்பீர்கள். இவை எல்லாம் உண்மை தானா என்பதை பின்வரும் நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.
ஒருமுறை அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அனைவரும் அதை மெய்மறந்து கேட்டனர். அவர் விடைபெறும் போது கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அங்கிருந்த இளைஞன் ஒருவன், ''சுவாரஸ்யமான பேச்சால் நேரம் போனதே தெரியவில்லை. தங்களின் வெற்றியின் ரகசியம்தான் என்ன'' எனக் கேட்டான். ''ரகசியம் ஒன்றுமில்லை. இரண்டு நாட்களாக இரவில் விழித்திருந்து குறிப்புகள் எடுத்தேன். இல்லாவிட்டால் என்னால் சிறப்பாக பேசியிருக்க முடியாது'' என்றார். எந்த வெற்றியும் உழைக்காமல் கிடைப்பதில்லை.