ADDED : மார் 22, 2024 09:27 AM
பாதிரியார் ஒருவர் பிரசங்கத்தை முடித்து விட்டு பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார். கூட்டமாக இருந்ததால் நின்று கொண்டார். அவரைக் கண்ட இளைஞர் ஒருவர் தன் இடத்தை விட்டுக் கொடுத்தார். பெரியோரை மதிக்க வேண்டும் என பிரசங்கத்தில் தான் சொன்னதை பின்பற்றும் இளைஞரை எண்ணி மகிழ்ந்தார் பாதிரியார்.
ஐம்பது ரூபாயைக் கொடுத்து கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டார். அவர் கொடுத்த மீதியில் பத்து ரூபாய் கூடுதலாக இருந்தது. ஓரிரு நிமிடம் கழிந்ததும், பத்து ரூபாயை கண்டக்டரிடம் திரும்ப ஒப்படைத்த போது, ''நான் தான் வேண்டும் என்றே உங்களிடம் பத்து ரூபாயைக் கொடுத்தேன். பிறரை ஏமாற்றுவது குற்றம் என பிரசங்கத்தில் சொன்னீர்கள். அதை நீங்கள் பின்பற்றுகிறீர்களா என அறியவே இப்படி செய்தேன்'' என்றார் கண்டக்டர். பாதிரியார் அதைக் கேட்டு புன்னகைத்தார்.