ADDED : டிச 15, 2023 11:29 AM
வெளியூரில் வேலை பார்க்கும் இளைய மகன் தன் தந்தைக்கு ஒரு மோதிரத்தையும், தாய்க்கு ஒரு செயினையும் கொடுத்தான். அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. அதே சமயத்தில் வெளியில் சென்று வந்த மூத்த மகன் பெற்றோருக்கு தேவையான மருந்துகள், பழங்கள் கொடுத்தான். மகிழ்ச்சியுடன் அதனை பெற்றுக் கொண்டனர். பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவதே முதல் கடமை என்ற உண்மை அப்போது தான் இளையவனுக்கு புரிந்தது.