ADDED : டிச 15, 2023 11:28 AM
மன்னரின் விருப்பத்திற்காக காட்டில் உள்ள யானைக்குட்டி ஒன்றை வீரர்கள் பிடித்து வந்தனர். அதை பார்த்த மன்னர் குட்டியானை அருமையாக உள்ளது. இதற்கு பயிற்சி கொடுங்கள் என்றார். அதை பயிற்சி என்ற பெயரில் துன்பப்படுத்தினர். இரவோடு இரவாக அவர்களிடம் இருந்து தப்பித்து காட்டிற்குள் ஓடியது. வீரர்கள் எப்படியாவது நம்மை பிடித்து விடுவர் என்ற பயத்தில் சரிவர சாப்பிடாமல் மெலிந்தது. அதைக் கண்ட காட்டிலுள்ள பூனை ஒன்று காரணம் கேட்கவே, யானையும் விளக்கம் சொன்னது. 'இந்த காட்டில் மனிதர் நடமாட்டமே இல்லை. நீ வீணாக பயப்படுகிறாய். நிறைய சாப்பிடு'' என யோசனை சொன்னது.பயம் இருந்தால் நிம்மதி இருக்காது.