ADDED : டிச 15, 2023 11:26 AM
கழுதையை பார்த்த நரி ஒன்று அக்கரையில் உள்ள திராட்சை தோட்டத்திற்கு செல்வோமா எனக் கேட்டது. என்முதுகில் ஏறிக்கொள். ஆற்றைக்கடந்து அங்கு செல்லலாம் என சொன்னது கழுதை. அங்கு சென்ற இருவரும் வயிறு புடைக்க பழங்களை தின்றனர். சாப்பிட்டால் பாட்டுபாடுவது என் வழக்கம் என்றது நரி. பாடாதே, உன் சத்தம் கேட்டு காவலாளிகள் வந்தால் அவர்களிடம் உதைபடுவோம் என சொன்னது கழுதை. ஆனாலும் நரி ஊளையிட்டுக் கொண்டே அருகிலுள்ள புதரில் மறைந்து கொண்டது. காவலாளிகள் கழுதையை உதைக்க அது மயங்கியது. மயக்கம் தெளிந்த பின் இருவரும் முன் போலவே ஆற்றைக் கடக்கத் தொடங்கின.'சாப்பிட்டவுடன் குளிப்பது என் வழக்கம்' என தந்திரமாகச் சொன்னது கழுதை. எவ்வளவு கெஞ்சியும் கேட்காத கழுதை ஆற்றில் மூழ்கியது. நீந்தத் தெரியாத நரியின் பாடு திண்டாட்டம் ஆனது. நம்பியவருக்கு துரோகம் செய்யாதீர்.