ADDED : மார் 14, 2025 08:47 AM
கிராமத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பழக்கூடைகளை அடுக்கி வைத்தபடி வேகமாக வந்தான் இளைஞன் வின்சென்ட். சாலையோர டீ கடையில் இருந்த முதியவரிடம், 'ஐயா... நகரத்திற்கு போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்' எனக் கேட்டான். அவரோ, 'மெதுவாக போனால் ஒரு மணி நேரமும், வேகமாக போனால் இரண்டு மணி நேரம் ஆகும்' என்றார். அதை சொன்ன பிறகும் அவன் வண்டியின் வேகத்தை குறைக்கவில்லை.
குண்டும் குழியுமாக இருந்த சாலையில் வேகமாக சென்றதால் கூடைகள் சரிந்தன. பழங்கள் உருண்டு விழுந்தன. பழங்களை சேகரித்து விட்டு இரண்டு மணி நேரத்தில் நகரத்தை அடைந்தான். அனுபவசாலியின் பேச்சை கேட்காமல் பலர் இப்படித்தான் சிரமப்படுகிறார்கள்.