ADDED : மார் 20, 2025 01:29 PM
நாடு பிடிக்கும் ஆசையில் ரஷ்யா மீது போர் தொடுத்தார் நெப்போலியன். அதன் தலைநகரான மாஸ்கோவைப் பிடிக்கும் ஆவலில் படை முன்னேறியது. நகரமே சூறையாடப்பட்டது. வீரர்கள் பலரும் ஏராளமான நகைகளைக் கொள்ளை அடித்தனர். ஆனால் அது கடுமையான குளிர் பிரதேசம் என்பதை நெப்போலியன் அறியவில்லை. வெற்றியுடன் சொந்த நாட்டிற்கு திரும்பும் போது குளிரை தாங்க முடியாமல் நான்கு லட்சம் வீரர்கள் இறந்தனர். போரில் ஈடுபட்ட வீரர்களில் மீண்டு வந்தவர்களில் இரண்டு லட்சம் பேர் மட்டுமே. ஆனால் அவர்களில் பலருக்கும் உடல்நிலை பலவீனமானது. இருந்தாலும் இரும்பு மனிதனான நெப்போலியன் நாடு பிடிக்கும் முயற்சியில் மனம் தளரவில்லை.