Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/நெஞ்சுக்கு நிம்மதி

நெஞ்சுக்கு நிம்மதி

நெஞ்சுக்கு நிம்மதி

நெஞ்சுக்கு நிம்மதி

ADDED : மார் 13, 2025 03:06 PM


Google News
Latest Tamil News
அமெரிக்காவைச் சேர்ந்த ராக்பெல்லர் என்ற பணக்காரர் இயற்கையை ரசித்து வாழ்பவர். பூந்தோட்டத்திற்குச் சென்றால், ''ஆ! என் ஆண்டவர் எத்தனை அழகான மலர்களைப் படைத்திருக்கிறார்.

இந்த சிறுசெடியை இப்படி நேர்த்தியாகச் செய்திருக்கும் அவர், என் வாழ்வில் என்னவெல்லாம் அற்புதம் செய்யக் காத்திருக்கிறாரோ?'' என சொல்லி மகிழ்ச்சி கொள்வார். வருத்தமான நேரத்தில் நீங்களும் இயற்கை வளம் மிக்க இடங்களுக்குச் செல்லுங்கள்.

கடற்கரையில் போய் அமர்ந்து அதன் எல்லையைத் தாண்டாமல் அலையடிக்கும் கடலின் அழகை ரசியுங்கள். ஆதியில் வானத்தையும், பூமியையும் படைத்த ஆண்டவரே நம்மையும் படைத்திருக்கிறார். ஒவ்வொரு படைப்பிலும் அவரைக் கண்டால் அவர் நம்முடன் பேசுவார். அப்போது நெஞ்சுக்கு நிம்மதி கிடைக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us