Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/தமிழிசை மழை பொழிந்த மாலை

தமிழிசை மழை பொழிந்த மாலை

தமிழிசை மழை பொழிந்த மாலை

தமிழிசை மழை பொழிந்த மாலை

மார் 29, 2025


Google News
Latest Tamil News
அமெரிக்கா, மயாமி, தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர்ஆய்வுநிறுவனம், வருடந்தோறும் தமிழ் மண்ணின் வசந்தத்தை அழைத்து வரும் தமிழிசை/ கர்நாடக இசைநிகழ்ச்சியில் கலைமாமணி சிக்கல் குருச்சரணின் இசைக் கச்சேரி நடைபெற்றது.

புளோரிடா அனைத்துலக பல்கலைக் கழகம் (எப்.ஐ.யூ) சமய ஆய்வுத்துறை, தமிழ் மற்றும் தமிழர் புலம்பெயர் ஆய்வுகள் நிறுவன ஆதரவில் எப்.ஐ.யூ. இசைப் பள்ளிக்கு வருகை தந்த முதல் கலைஞர் என்னும் சிறப்பையும் பெற்றிருக்கிறார் சிக்கல் குருச்சரண்



(https://carta.fiu.edu/music/sikkilgurucharan/).



இந்த நிகழ்வு நிம்மி அருணாச்சலம் தலைமையில் இயங்கும் கமலா மற்றும் அருணாச்சலம் தமிழிசை அறக்கட்டளையின் பெருந்தன்மையான ஆதரவால் சாத்தியமானது. இந்தநிகழ்வு, நிறுவனத் தலைவர் பேராசிரியர் முனைவர் கலைமதி வரவேற்புரையுடன் தொடங்கியது. முதலில் தமிழிலும் பின்னர் ஆங்கிலத்திலும் வழங்கப்பட்ட இந்த உரை, அதில் இடம் பெற்ற கவிதையுடன் வந்திருந்தோரை மகிழ்வித்தது:



'இனிய அந்திப் பொழுது வரும் வேளையில் -



பகல் மாலைக்கு வழிவிடும் போதினில்,



ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான இசைவடிவை -



வானமும் பூமியும் இணையும் தமிழிசையை -



மூங்கில் காடுகளின் இனிய நாதத்தை,



தீக்கனல் விழிகளுடன் இளம் கலைஞர்களும்,



அவர்களின் திறமைகள் ஒன்றிணைந்து



விண்ணின் தெய்வீக இசைக் குழுவாய்



மனம் மயங்க செய்யும் தன் கலையால்,



கல்லையும் கனிய வைக்கும் தன் குரலால்



இந்த அரங்கம் முழுவதும் நிறைக்கப் போகும்



கலைமாமணி சிக்கில் குருசரன் அவர்களையும்..”



2022 ஆம் ஆண்டு அமெரிக்க காற்றில் பரவிய கலைமாமணி சிக்கில் குருச்சரணின் 'துன்பங்கள் நீங்க அறியாமையிலிருந்து மீண்டு ஒளியை நோக்கி' எனும் தொடர் இசை பயணம் இன்றுவரை தொடர்ந்து சுடர்விட்டு பிரகாசிக்கிறது. அனைவரும் ஆன்ம ஒளிபெற உலகில் உள்ள மனித உயிர்கள் யாவரும் ஒரே நிலையிலானது என்றுணர வள்ளலாரின் திருவருட்பா திருமுறைகளைத் தமிழிசை வழியே (கர்நாடக இசை) எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவும் அந்த சத்திய நித்திய சுடரைக் கொண்டாடும் வகையிலும் தொடர் கச்சேரி அரங்கேற்றப்பட்டு வருகிறது.



வள்ளலாரின் தமிழ்ப் பணியும், இயற்றிய செய்யுள்களின் ஆச்சரிய நுட்பங்களும், அறிவியல் உண்மைகளும், மனித குலத்துக்காய் இறையிடம் மன்றாடிய பாங்கும், வாடிய பயிரைக் காணும் போதெல்லாம் வாடி நின்ற ஞானநிலையும், அடிகளாரின் அகஜோதி வடிவம் மாந்தரின் மனதுக்குள் ஆன்ம ஒளியாய் அருள்பாலிப்பதும் அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்ட புறஜோதி (அக்னி) வடிவம் மாந்தரின் பசிப்போக்கும் அன்னக்கொடையாய் இன்றுவரை திகழ்ந்து வருவதையும் பசிப்பிணி போக்கும் அந்தத் தருமசாலையின் அருமையினை உலகுக்குச் சொல்ல வேண்டும் என்பது நமது மாபெரும் பணியாகும்.-



- தினமலர் வாசகி சுசிலாமணிக்கம், தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவனம்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us