/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/ராகா ரிதம் விழா 2025 - உணர்வுகளும் பாரம்பரியமும் ஒன்றுபடும் இசைத் திருவிழாராகா ரிதம் விழா 2025 - உணர்வுகளும் பாரம்பரியமும் ஒன்றுபடும் இசைத் திருவிழா
ராகா ரிதம் விழா 2025 - உணர்வுகளும் பாரம்பரியமும் ஒன்றுபடும் இசைத் திருவிழா
ராகா ரிதம் விழா 2025 - உணர்வுகளும் பாரம்பரியமும் ஒன்றுபடும் இசைத் திருவிழா
ராகா ரிதம் விழா 2025 - உணர்வுகளும் பாரம்பரியமும் ஒன்றுபடும் இசைத் திருவிழா

முதல் நாள்: நவரசா - இசையிலும் கவிதைகளிலும் ஒன்பது உணர்வுகள் மெலாஹூசெட் (Melahuset) மற்றும் இண்டோநார்ட் (Indonord) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன், விழாவின் முதல் நாள் நவரசா எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. ஒன்பது சிறப்பு கலைஞர்கள் ஒவ்வொரு உணர்வையும் பிரதிபலிக்கும் ராகங்களை தேர்வு செய்து, இசை, இலக்கியம், மற்றும் கவிதைகளின் கலவையில் ஒப்பற்ற நிகழ்ச்சியை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சி இசை ஒரு உலகளாவிய மொழி. அதுவே பல கலாச்சாரம் மற்றும் பலதரப்பட்ட மக்களை இணைக்கும் பாலமாக இருக்கும் என்பதற்கு சான்றாக இருந்தது. ஐந்து மொழிகளில் கவிதைகள் இடம்பெற்றதால் ஒவ்வொரு பார்வையாளரும் தங்கள் பாரம்பரியத்தோடு தொடர்பு கொள்ளும் வகையில் அமைந்தது. காளிதாசரின் அபிக்ஞான சகுந்தலம், ஆழ்வார் பாசுரம், பைபிளின் நல்ல சமாரியர் கதை, சுப்ரமணிய பாரதியின் விடுதலைப் பாடல், ஆங்கிலம் மற்றும் நோர்வே மொழியில் அமைந்த தாலாட்டுப் பாடல்கள் போன்ற பல இலக்கியங்களும் மேடையில் அரங்கேறின.
சுற்றுச்சூழல் பிரச்சனைகளின் முக்கியத்துவத்தை முன்வைத்து, பீபத்ஸா (அருவருப்பு) உணர்வை வெளிப்படுத்த சுசரித்ரா ராகம் மூலம், நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளக்கூடிய நதிகளின் மாசுபாடு குறித்து உமா ரங்கநாதன் எழுதிய கவிதை பாடப்பட்டது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இசையின் பங்கை வலியுறுத்தும் விதமாக அமைந்தது.
பிரதான கலைஞர்களாக நோர்வேயிலிருந்து உமா ரங்கநாதன், பார்ட்ரிக் வெட்லாக், ஆனந்த் நாராயணன், சந்திரகாந்த் ராமமூர்த்தி, பிராதனா அகில், சாரதா ராமசுப்ரமணியன், ஸ்வீடனில் இருந்து சுவ்ரத் அப்டே, சந்திரசேகர் CR, பின்லாந்தில் இருந்து நிஷா மாமென் ஆகியோர் பங்கேற்றனர். ஒவ்வொருவரும் தங்களின் தனித்துவமான இசை நடைமுறைகளில் ஒவ்வொரு உணர்வையும் பிரதிபலித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பினை மேலும் உயர்த்த, இந்தியத் தூதர் டாக்டர் அக்வினோ விமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவின் மதிப்பையும், கலாச்சார பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இரண்டாம் நாள்: தியாகராஜ ஆராதனை 2025
அஸ்கர் கம்யூன் ஆதரவுடன் விழாவின் இரண்டாம் நாள் கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளுக்கு ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியை தொடங்கும் விதமாக குழந்தைகள் மற்றும் இளம் கலைஞர்கள் தியாகராஜரின் பாடல்களைப் பாடினர். விழாவின் மிக முக்கிய நிகழ்வாக, பஞ்சரத்ன கிருதிகள் பாடப்பட்டது. பக்தி மற்றும் நாதோபாஸனையின் உணர்வுகளை வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி, 100க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தை வழங்கியது.
அந்த நாளின் முக்கிய கலைஞர்களாக, உமா ரங்கநாதன், சந்திரகாந்த் ராமமூர்த்தி, ஆனந்த் நாராயணன், ஸ்ருதி கிருஷ்ணன் (நோர்வே), டாக்டர் உமா ராமகிருஷ்ணன் (பெல்ஜியம்), நிஷா மாமென் (பின்லாந்து), சந்திரசேகர் CR (ஸ்வீடன்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
பார்வையாளர்களின் கருத்துக்கள்
விழாவிற்குப் பங்கேற்றவர்கள் இதனை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். நிகழ்ச்சியின் கலைத் திறன், கருப்பொருள், மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை ஆகியவை பாராட்டைப் பெற்றன.
“நவரசா நிகழ்ச்சி ஒரு கண்கவர் அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு ராகமும், ஒவ்வொரு கவிதையும், ஒவ்வொரு தாளமும் ஆழமானகதைகளை சொல்லியது!”
“பஞ்சரத்ன கிருதிகள் மிகவும் மெய்சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது. குரல்களின் ஒற்றுமையுடன் இசைக்கும் இசைக்கருவிகள் இணைந்த காட்சியினால் முழுமையான பக்திப் பரவசம் ஏற்படுத்தப்பட்டது.”
“இந்த விழா பாரம்பரியத்தையும் புதிய முயற்சிகளையும் இணைத்தது. இந்திய இசை பற்றி அறியாத எனக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது!”
ஒரு மறக்க முடியாத இசை விழா இசை ரசிகர்கள் மற்றும் கலைஞர்களின் ஆதரவு ஆர்ட் ஹார்ட் இன்ஸ்டிட்யூட் மிகுந்த உத்வேகத்தை தருகிறது இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்த முயற்சிக்கப்படும். இது இந்திய பாரம்பரிய இசையின் பெருமையை கொண்டாடுவதோடு, புதிய முயற்சிகளுக்கான மேடையாகவும், கலாச்சார பரிமாற்றத்திற்கும், கலை சிறப்பிற்கும் வலிமையளிக்கும் ஒரு சிறந்த நிகழ்வாக இருக்கும்.
- தினமலர் வாசகர் ராமசுப்பிரமணியன்