/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/நியூஜெர்சி ஶ்ரீ மகாபெரியவா மணிமண்டபத்தில், வைகாசி விசாகம், ஶ்ரீ மகாபெரியவா ஜெயந்தி மகோத்ஸ்வம்நியூஜெர்சி ஶ்ரீ மகாபெரியவா மணிமண்டபத்தில், வைகாசி விசாகம், ஶ்ரீ மகாபெரியவா ஜெயந்தி மகோத்ஸ்வம்
நியூஜெர்சி ஶ்ரீ மகாபெரியவா மணிமண்டபத்தில், வைகாசி விசாகம், ஶ்ரீ மகாபெரியவா ஜெயந்தி மகோத்ஸ்வம்
நியூஜெர்சி ஶ்ரீ மகாபெரியவா மணிமண்டபத்தில், வைகாசி விசாகம், ஶ்ரீ மகாபெரியவா ஜெயந்தி மகோத்ஸ்வம்
நியூஜெர்சி ஶ்ரீ மகாபெரியவா மணிமண்டபத்தில், வைகாசி விசாகம், ஶ்ரீ மகாபெரியவா ஜெயந்தி மகோத்ஸ்வம்

முன்னதாக 22ஆம்தேதி காலையில், சுவாமிநாதஸ்வாமிக்கு குமாரஸுக்த ஹோமம், விதவிதமான அபிஷேகங்கள் மற்றும் ஸ்வாமினாதஸ்வாமிக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டது. அபிஷேக, அலங்காரம் செய்யும் நேரத்தில் குழுமி இருந்த பக்தர்கள், திருப்புகழ் பாடி முருகனை வழிபட்டனர்.
பின்மாலை, பக்தர்கள் அரோஹரா என்ற கோஷத்துடன் பால்குடம் மற்றும் காவடி ஏந்திவந்து சுவாமிநாதஸ்வாமிக்கு பால் அபிஷேகம் மற்றும் இதர அபிஷேகங்கள் நடைபெற்றது. பிறகு, ஸ்வாமிக்கு, ராஜஅலங்காரம் செய்யபட்டு , சத்ருசம்ஹாரத்ரிசதி அர்ச்சனை நடந்தது. இதனைத் தொடர்ந்து, முருகன் உற்சவமூர்த்திக்கு, மயூரவாகன சேவை, பக்தர்கள் கோஷத்துடன் மிகசிறப்பாக நடைபெற்றது.
23ஆம்தேதி, காஞ்சிமடத்தின் 68வது பீடாதிபதியாக விளங்கி, தவஒளியாய் திகழ்ந்து, நம்மை எல்லாம் ரக்ஷிக்க வந்த, நடமாடும் தெய்வமாக விளங்கிய ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற திருநாமம் கொண்ட ஸ்ரீ மஹா பெரியவாளின் ஜென்ம தினமான மகா அனுஷ தினம் மிகமிக சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை கணபதி ஹோமம், அவஹந்தி ஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம் ஏகவாரருத்திராபிஷேகம் முடிந்து பூப்பந்தலில் பெரியவாளுக்கு குங்குமப்பூவால் சஹஸ்ர அர்ச்சனை நடைபெற்றது. இதற்கு சுமார் நாலறை கிலோ குங்குமப்பூ பக்தர்களால் அளிக்கப்பட்டது.
மஹா பெரியவாளை குங்குமப்பூ அலங்காரத்தில் பார்க்க பார்க்க எல்லோருக்கும் மெய்சிலிர்த்த உணர்வே மிகுதியாக இருந்தது . அதே சமயத்தில் காமாட்சி அம்பாளுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது. அம்பாள் தங்க கவசத்தில் ஜொலிக்க, மகா பெரியவா குங்கும்ப்பூவில் பொலிவுற இருந்த காட்சியை காண கண் கோடி வேண்டும்.
அன்று மாலை காமாட்சி அம்பாளுக்கு நவாவர்ணபூஜை நடந்தது. பிறகு, மகா பெரியவா புறப்பாடும் நடைபெற்றது. ஜெயஜெயசங்கர, ஹரஹரசங்கர என்னும் கோஷம் வானை முட்டியது. அமெரிக்காவில் கல்லூரியில் படித்து, நல்ல வேலையில் இருந்தாலும், ஒரு இளைஞன் பெரியவாளுக்கு, அங்கப் பிரதக்ஷணம் செய்து வணங்கியது எல்லோரையும் வியக்க வைத்தது.
எப்பேர்ப்பட்ட மஹான் அவர்!!! எல்லோரையும் ரக்ஷிக்கும் பெரியவா அருள் இருக்கும்வரை, நமது கலாச்சாரம் நிலைத்து இருக்கும் என்பதற்கு, இதுவே சாட்சியாகும்.
- தினமலர் வாசகி டாக்டர் அலமேலுசூரி