Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/சான் பிரான்ஸிஸ்கோவில் மகரிஷி பரஞ்ஜோதியார்

சான் பிரான்ஸிஸ்கோவில் மகரிஷி பரஞ்ஜோதியார்

சான் பிரான்ஸிஸ்கோவில் மகரிஷி பரஞ்ஜோதியார்

சான் பிரான்ஸிஸ்கோவில் மகரிஷி பரஞ்ஜோதியார்

மே 30, 2024


Google News
Latest Tamil News
ஓர் இறை - ஓர் மொழி - ஒரே நாணயம் - எந்நாட்டு விளைவானாலும் எல்லோரும் நிர்வகிக்கும் உரிமை - ஓருலக சமதர்ம சமத்துவ ( இறையாட்சி ) நல்லாட்சி அமைய உலகெங்கும் ஆன்மிக யாத்திரை மேற்கொண்டு வரும் உலக அமைதித் தூதர் - திருமூர்த்தி மலை தென்கயிலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் தத்துவ தவ உயர் ஞான பீடாதிபதி ஜெகத்குரு மகா மகரிஷி குருமஹான் பரஞ்ஜோதியார் மே மாதம் 26 ஆம் தேதி பெங்களூருவிலிருந்து சான் பிரான்ஸிஸ்கோவிற்கு நல்லெண்ண அமைதி யாத்திரை மேற்கொண்டார்.

சான் பிரான்ஸிஸ்கோ ஆன்மிகப் பெருமக்களின் நீண்ட நாள் கோரிக்கையையும் வேட்கையையும் நிறைவேற்றும் வண்ணம் குருமஹான் மேற்கொண்டுள்ள இந்த யாத்திரை ஜுன் 11 ஆம் தேதி நிறைவுறும்.

சான் பிரான்ஸிஸ்கோ உலக சமாதான ஆலயத்தைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் - பிரமுகர்கள் - பத்திரிகையாளர்கள் விமான நிலையம் வந்து மலர்க் கொத்து வழங்கி பூரண கும்ப மரியாதையுடன் மகரிஷியை வரவேற்றனர். தீட்சை வழங்குதல் - சர்வ சக்தி சித்த மஹா யக்ஞம் நடத்துதல் - அகதவப் பயிற்சி அளித்தல் - ஆழ்நிலை தியானம் கற்பித்தல் முதலான தெய்விக நிகழ்வுகளை மகரிஷி நடத்துகிறார். வெளிநாட்டவர் உள்ளிட்ட பலர் ஆர்வத்தோடு நிகழ்வுகளுக்கு முன் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத் தகுந்ததாகும். முன்னதாக பெங்களூரு விமான நிலையத்தில் பெருமளவில் திரண்டு வழியனுப்பி வைத்த மகரிஷியின் இந்திய சீடர்களுக்கு நல்லருளாசி வழங்கி குருமஹான் புறப்பட்டார்.



- தினமலர் வாசகர் தமிழ்க்கோ







      Our Apps Available On




      Dinamalar

      Follow us