/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/பிட்ஸ்பர்க் நகரில் இலவச மருத்துவ மற்றும் உணவு சேகரிப்பு முகாம்பிட்ஸ்பர்க் நகரில் இலவச மருத்துவ மற்றும் உணவு சேகரிப்பு முகாம்
பிட்ஸ்பர்க் நகரில் இலவச மருத்துவ மற்றும் உணவு சேகரிப்பு முகாம்
பிட்ஸ்பர்க் நகரில் இலவச மருத்துவ மற்றும் உணவு சேகரிப்பு முகாம்
பிட்ஸ்பர்க் நகரில் இலவச மருத்துவ மற்றும் உணவு சேகரிப்பு முகாம்
தற்போதுள்ள அவசர வாழ்க்கைச்சூழலில் நம்மையும் நம் குடும்பத்தாரின் உடல் நலத்தையும் பாதுகாப்பது பற்றி பல்வேறு துறைகளை சேர்ந்த உள்ளூர் தமிழ் மருத்துவர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர். இதில் டாக்டர் சத்தியா நடராஜன், டாக்டர் ஸ்வேதா கணேஷ், டாக்டர் விக்ரம் களத்தூர் ரகு, டாக்டர் ஶ்ரீபிரியா ராமன், டாக்டர் கிருத்திகா அழகிரிசாமி, டாக்டர் நித்யா ஐயர், டாக்டர் கிருஷ்ணா நாராயணன், டாக்டர் ரவி பாலு, ஆற்றல் மற்றும் ஊக்க நிபுணர் சீதாலக்ஷ்மி நடேசன் ஆகியோர் தங்களுடைய தொடர்வேலைகளுக்கு நடுவே தமிழ் சங்கத்தின் வேண்டுதலை ஏற்று இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மக்களின் உடல்நலம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்காக யோகா பயிற்சியும் மற்றும் படம் வரையும் பயிற்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சி மக்களின் மனமார்ந்த நன்றியுடன் இனிதாக நிறைவடைந்தது.
- நமது செய்தியாளர் ஜெயஶ்ரீ சௌந்தரராஜன்