/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை முன்னெடுத்த தந்தையர் தின விழாகுறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை முன்னெடுத்த தந்தையர் தின விழா
குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை முன்னெடுத்த தந்தையர் தின விழா
குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை முன்னெடுத்த தந்தையர் தின விழா
குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை முன்னெடுத்த தந்தையர் தின விழா

ஹூஸ்டன்: குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை (KKSF) மூன்றாவது ஆண்டாக தந்தையர் தினத்தை மிகுந்த விமரிசையாகக் கொண்டாடியது.
சமூகத்தின் முன்னணி மூன்று தந்தைகளான ஏ.கே.எஸ், நாட் அண்ணாமலை, மருத்துவர் பாலா ஐயர் ஆகியோருக்கு, குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அளித்த பங்களிப்புக்காக கண்ணியமான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
விழா, Slingshot எனப்படும் மூன்றுகால வாகனத்தில் நடைபெரும் 'தந்தையர் ஊர்வலத்துடன்' மெருகேறிய தொடக்கத்தை பெற்றது. இதனை மருத்துவர் கோபால் தாண்டவராஜன் தொடங்கி வைத்தார்.
மூன்று மரியாதைக்குரிய தந்தைகளும் MTS கல்யாண மண்டபத்தில் சிறப்பாக வரவேற்கப்பட்டனர். இளம் அபிநவ் தனது ச்லோகா பாராயணத்துடன் நிகழ்வை மனதைக் கொள்ளை கொள்ளும்படி துவக்கினார்.
அறக்கட்டளையின் தலைவர் செம்மொழி மாலா கோபால் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மரியாதைக்குரிய தந்தைகள் மேடைக்கு அழைக்கப்பட்டு பட்டயங்கள் வழங்கப்பட்டன. பரிசு பெற்ற ஒவ்வொரும் மக்களிடம் உருக்கமான உற்சாகமான உரைகளைப் பகிர்ந்தனர்.
நிகழ்வின் தொகுப்பாளராக KKSF படைப்புத் துறை இயக்குநர் பார்த்திபன் ரவிக்குமார் சிறப்பாக பணியாற்றினார். விழாவின் முக்கிய விருந்தினராக திகழ்ந்தவர் செந்தில் குமார். (Sierra Digital Inc. நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி) அவரை மேடைக்கு அழைத்து வரவேற்றவர், அறக்கட்டளையின் செயல்பாட்டுத் தலைவர் நந்து ராதாகிருஷ்ணன்.
தந்தையர் தின விழாவில், உயர்நிலை பள்ளி பட்டம் பெற்ற மாணவர்களின் வெற்றியும் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு, தேர்வு செய்யப்பட்ட 10 மாணவர்கள் மேடையில் அழைத்து முக்கிய விருந்தினர் மூலம் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தவர் மீரா ஸ்ரீகாந்த், KKSF அலுவலகப் பொறுப்பாளர்.
இவ்விழாவின் இலக்கிய-இசை-நடன நிகழ்ச்சிகளில், உள்ளூர் கலைஞர்கள் மற்றும் KKSF இன் செயலாளர் ஆதி கோபால் பங்கேற்று பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
பாடகர்கள்:வர்ஷா வாசு, ஆதி கோபால், அதிதி
நடனக் கலைஞர்கள்: ஆக்ருதி, வர்ஷினி, நிதிலாக்ஷயா, ஹேமா, சுப்ரியா, சிவானி
குறிப்பாக ஓபுலி கார்த்திக் வழங்கிய 'தந்தை-மகன்/ மகள் ராம்ப் வாக்' கலாச்சார நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது. இந்நிகழ்வில், தந்தைகள் குழந்தைகளுடன் கையைப் பிடித்து மேடையில் நடக்கிற காட்சி, எல்லோரது இதயத்தையும் உருக வைத்தது. குறிப்பாக, ஒரு மூத்த குடிமகன் தனது மகளுடன் நடக்கச் செய்த தருணம், பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
விழா முடிவில் தலைவர் மாலா கோபால் நன்றி உரையாற்ற, இந்நிகழ்ச்சி 'குமார் ரெஸ்டாரெண்ட்' வழங்கிய சுவைமிக்க விருந்து மூலம் நிறைவுற்றது.- தகவல்: நந்து ராதாகிருஷ்ணன், செயற்பாட்டுத் தலைவர், KKSF
-- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்