/உலக தமிழர்/சிங்கப்பூர்/செய்திகள்/சிங்கப்பூர் ஆலயத்தில் தெய்விக திருமணக் கோலாகலம்சிங்கப்பூர் ஆலயத்தில் தெய்விக திருமணக் கோலாகலம்
சிங்கப்பூர் ஆலயத்தில் தெய்விக திருமணக் கோலாகலம்
சிங்கப்பூர் ஆலயத்தில் தெய்விக திருமணக் கோலாகலம்
சிங்கப்பூர் ஆலயத்தில் தெய்விக திருமணக் கோலாகலம்
நவ 09, 2024

நிகழும் குரோதி ஆண்டு ஐப்பசித் திங்கள் 22 ஆம் நாள் வெள்ளிக் கிழமை சுக்ல பட்சம் - சப்தமி திதியும் திருவோண நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுப யோக சுப தினத்தில் இரவு ஏழு மணிக்கு மேல் ஒன்பது மணிக்குள்ளாக ஸ்ரீ சிவ கிருஷ்ணர் முன்னிலையில், ஸ்ரீ சிவன் சக்தி கனிஷ்ட குமாரர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கும் ஸ்ரீ நம்பி ராஜன்- ஸ்ரீ தேவேந்திரன் குமாரத்திகள் ஸ்ரீ வள்ளி - ஸ்ரீ தேவயானைக்கும் தேவாதி தேவர்கள் முன்னிலையில் திருக்கல்யாண மஹோற்சவம், சிங்கப்பூர் மார்ஷலிங் ரைஸ் 739127 -இல் அமைந்திருக்கும் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத் திருமண மண்டபத்தில் “ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... வீர வேல் முருகனுக்கு அரோகரா “ எனும் கோஷம் முழங்க ராஜேஸ்வரி குடும்பத்தினர் மனமுவந்து வரவேற்க மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பக்தப் பெருமக்கள் ஆலயம் நிரம்பி வழிய தெய்விக நாதஸ்வர மங்கள இசை முழங்க நாகராஜ சிவாச்சாரியாரால் தெய்விகத் தம்பதிகளுக்கு திருமாங்கல்யதாரணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பங்கேற்ற பக்தப் பெருமக்கள் மொய் எழுதி, திருக்கல்யாண அறுசுவை விருந்துண்டு அற்புதத் திருமண வைபவத்தில் கலந்து கொண்டு கழிபேருவகை எய்தினர். சுரேஷ் குமார் தலைமையிலான ஆலய நிர்வாகக் குழுவினர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்