
மனாமா : பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் இந்திய தூதரகத்தின் சார்பில் 10வது சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் எளிய வகை யோகாசனங்களை பயிற்சியாளர்கள் மேற்கொள்ள அதனை பின்பற்றி பொதுமக்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். யோகா உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வை ஏற்படுத்தக்கூடியது என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள், மாணவ, மாணவியர் என பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா