
பஹ்ரைன்: உலக சுற்றுச்சூழல் தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-அன்று உலகளவில் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சமூக உதவி இயக்கம், சிரோ ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வையும், செயல்பாடுகளையும் ஊக்குவிக்கும் வகையில், குதைபியா பகுதியிலுள்ள ஆண்டலஸ் கார்டனில் அதன் உறுப்பினர்கள், அகாடமி மாணவர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு சிறு செடிகள் விநியோகித்தது.
மேலும் அந்த நிகழ்வில், ஏழை குடும்பங்களுக்கு, ஈத் பெருநாளுக்கான உணவு வகைகள் வழங்கப்பட்டதுடன், பழச்சாறு, குடிநீர் மற்றும் இனிப்புகள் விநியோகிக்கப்பட்டன. லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் பிரதிநிதிகள் சையத் ஹனீஃப், ஷபீக் மலபுறம், அஜித் கிருஷ்ணன், மஜாருதீன், நிசார் ஷா, அகிலா லைசா ஜோசப், ஆயிஷா நிஹாரா, ஸமீனா ஷேக், சிரோ ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பிரதிநிதி முஹம்மது மிஹ்ராஸ் மற்றும் அதன் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா