/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/கடல் கடந்தாலும்தாயகத்தை நினைவு படுத்திய ஹஜ் பெருநாள் தொழுகைகடல் கடந்தாலும்தாயகத்தை நினைவு படுத்திய ஹஜ் பெருநாள் தொழுகை
கடல் கடந்தாலும்தாயகத்தை நினைவு படுத்திய ஹஜ் பெருநாள் தொழுகை
கடல் கடந்தாலும்தாயகத்தை நினைவு படுத்திய ஹஜ் பெருநாள் தொழுகை
கடல் கடந்தாலும்தாயகத்தை நினைவு படுத்திய ஹஜ் பெருநாள் தொழுகை

ஜெத்தாவில் அஜிஸியா தஃவா சென்டர் மற்றும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) ஜெத்தா மேற்கு மண்டலம் இணைந்து நடத்திய ஹஜ் பெருநாள் தொழுகையில் 700க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். இதில் மௌலவி இப்ராஹிம் அன்வாரி காலத்திற்கு தேவையான சிறந்த உரையாற்றினார். ஜெத்தாவில் மார்க்க மற்றும் சமுதாய பணிகளில் முன்னிலை வகிக்கும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரத்தில் அனைவரும் தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மௌலவி இப்ராஹிம் அன்வாரிக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. நகரத்தை விட்டு 30 நிமிடம் தூரம் இருந்தும் தொழுகை ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே பெரும் திரளாக மக்கள் கூடி தக்பீர் சொல்லியதும் தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்கள் கூறி இனிப்புகளை பரிமாறி கொண்டது தாயக பெருநாளை நினைவுபடுத்தியது.
- நமது செய்தியாளர் M Siraj