Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/வெற்றி இலக்கை தீர்மானியுங்கள்; பயிற்சிப் பட்டறை

வெற்றி இலக்கை தீர்மானியுங்கள்; பயிற்சிப் பட்டறை

வெற்றி இலக்கை தீர்மானியுங்கள்; பயிற்சிப் பட்டறை

வெற்றி இலக்கை தீர்மானியுங்கள்; பயிற்சிப் பட்டறை

ஆக 13, 2025


Google News
Latest Tamil News
சவூதி அரேபியா, ஜெத்தா நகரில் உங்கள் வெற்றி இலக்கை தீர்மானியுங்கள் எனும் குறிக்கோள்களை செயல்படுத்த பயிற்சிப் பட்டறை நடந்தது.

சாதிக்க வேண்டும் என துடிப்புடன் செயல்படுவோர் குறிக்கோள்களை அடைய திறவுகோலாக அமையும் பயிற்சிப் பட்டறை ஆகஸ்ட் 8 வெள்ளிக்கிழமை மாலை ஜெத்தா செண்ட்ரா டிரேடிங் நிறுவனத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இப்பயனுள்ள நிகழ்வினை தமிழே நீ முன்னெடு மற்றும் ஈக்வானிமிட்டி லைஃப் ஸ்கில்ஸ் அகாடமி மற்றும் அமேஸ்மெண்ட் அண்ட் கோ ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. இது கலந்து கொண்டோரின் வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்வாக இருந்தது. நிகழ்வின் நோக்கம் இளைஞர்களின் உள் திறமையை வெளிக்கொண்டு வரும் கனவுகளை நிஜமாக்க எப்படி செயல்படுவது என்பதை மிகச் சிறந்த எடுத்துக் காட்டுகளுடன் பயிற்சிப் பட்டறையாக எளிய வழிகளை கற்பிக்கும் நிகழ்வாக நடந்தது.

இரண்டரை மணி நேரம் நடந்த நிகழ்ச்சியை சொல்வேந்தர் அஃபஸ்ஜா ஜாஜி தொய்வில்லாமல் கலந்து கொண்டோர் பாராட்டும்படி மிகச் சிறப்பாக நடத்தினார். மிகச்சிறந்த காட்சிகளைக் கொண்டு எளிதில் விளக்கியது நிகழ்ச்சியின் வெற்றிக்கு வித்திட்டது.

நிகழ்ச்சியில் அமேஸ்மெண்ட் கோ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி திரு முகமது சிராஜ், அயலக திமுக (NRTIA) சவூதி அரேபிய மேற்கு மண்டல துணை அமைப்பாளர் தஞ்சை லயன் ஜாஹிர் ஹுசைன், தாதாபாய் டிராவல்ஸ் நிறுவன மேலாளர் முகமது அபூபக்கர், விஸ்டம் அவுட்னைண்டு நிறுவனத்தின் பயிற்சியாளர் அஸ்கர் அலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.

நிகழ்ச்சியில் தெளிவான சிந்தனையை வளர்க்கும் பயிற்சிகள், கனவுகளை நிஜமாக்கும் வழிமுறை விஷன் மேப்பிங் மூலம் வரைபடமாக எடுத்துரைத்தல், நடைமுறை மற்றும் நோக்கமுள்ள குறிக்கோள்களை அமைக்கும் முறைமைகளை கட்டமைத்தல், தனிநபர் வளர்ச்சிக்கு உந்துதல் ஏற்படுத்தும் நுட்பமான முறையில் பயிற்சியாளர் அஃபஸ்ஜா ஜாஜி எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைத்தார்.

கலந்து கொண்டவர்கள் தங்கள் திறமைகளை அடையாளம் காணும் ஓர் சிறந்த நிகழ்வாக நடந்தது என பாராட்டும்படி நிகழ்ச்சி நடந்ததும், நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் இரவு உணவும் வழங்கப்பட்டு நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் தமிழ் மக்கள் மட்டுமல்லாது பிற மாநில இளைஞர்களும், அரேபிய மற்றும் ஆப்பிரிக்க இளைஞர்களும் கலந்து கொண்டது நிகழ்ச்சியின் வெற்றியை பிரதிபலித்தது.

- நமது செய்தியாளர், எம்.சிராஜ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us