Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ ஓரணியில் தமிழ்நாடு - சவுதியில் தமிழர்கள் ஆதரவு

ஓரணியில் தமிழ்நாடு - சவுதியில் தமிழர்கள் ஆதரவு

ஓரணியில் தமிழ்நாடு - சவுதியில் தமிழர்கள் ஆதரவு

ஓரணியில் தமிழ்நாடு - சவுதியில் தமிழர்கள் ஆதரவு

ஆக 14, 2025


Google News
Latest Tamil News
ரியாத்: சவூதி அரேபியா தமாம் கிழக்கு மண்டல அயலக அணியின் இளைஞர் அணி கூட்டம் நடைபெற்றது.

சவூதி அரேபியா தமாம் கிழக்கு மண்டல அயலக அணியின் இளைஞர் அணி கூட்டம் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முழக்கத்தை பறைசாற்றும் விதமாக கூட்டம் கூடியது. அயலக அணி மேற்கு மண்டல அமைப்பாளர் சிக்கந்தர் பாபு தலைமையில் குண்டு பிலால், அஷ்ரப், ஆனந்தராஜ், பரீதா முன்னிலை ஏற்க , ரபிக், அஹ்மத், இம்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகம், தொன்மையும் தொண்டும் கலந்து . சங்க காலம் முதலே “ஒற்றுமையே வலிமை” என்ற செய்தி எமது இலக்கியங்களில் ஒலித்துக் கொண்டே வந்திருக்கிறது. இன்றைய காலத்தில், கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நீதி, பொருளாதார முன்னேற்றம் போன்ற துறைகளில் ஒரே அணியில் செயல்படுவது மிகவும் அவசியம். அரசாங்கம், பொதுமக்கள், இளைஞர்கள், அறக்கட்டளைகள் இவை அனைத்தும் ஒரு சேர இருப்பது தான் ஓரணியில் தமிழ் நாடு என்று முதல்வர் அவர்கள் குறிப்பிடுகிறார் என்று அயலக அணி மேற்கு மண்டல அமைப்பாளர் சிக்கந்தர் பாபு குறிப்பிட்டு பேசினார். ஒவ்வொருவரும் தம் பங்கு சிறப்பாக செய்தால், வெற்றி நிச்சயம், என்று அஷ்ரப் வலியுறுத்தினார்.

பரீதா பேசுகையில் அணியின் வலிமை, ஒருவரின் திறமையை விட, எல்லோரின் ஒருங்கிணைந்த முயற்சியில் அடங்கி இருக்கிறது என்றார்.

ஒரே அணியில் செயல்படும் மனப்பாங்கு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம். ஒற்றுமை, புரிதல், பகிர்வு ஆகிய மூன்றும் இருந்தால், எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் போற்றும் வகையில் தொடர்ந்து பேசியவர்கள் வலியுறுத்தினர்.

- நமது செய்தியாளர் , சிராஜ் .





      Our Apps Available On




      Dinamalar

      Follow us