/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ஜின்னாஹ் ஷர்புத்தீன் எழுதிய இயேசு( ஈசா நபி) காவியம் நூல் வெளியீடுஜின்னாஹ் ஷர்புத்தீன் எழுதிய இயேசு( ஈசா நபி) காவியம் நூல் வெளியீடு
ஜின்னாஹ் ஷர்புத்தீன் எழுதிய இயேசு( ஈசா நபி) காவியம் நூல் வெளியீடு
ஜின்னாஹ் ஷர்புத்தீன் எழுதிய இயேசு( ஈசா நபி) காவியம் நூல் வெளியீடு
ஜின்னாஹ் ஷர்புத்தீன் எழுதிய இயேசு( ஈசா நபி) காவியம் நூல் வெளியீடு
மார் 09, 2025

காப்பியக்கோ ஜின்னாஷர்புத்தீன் சமீபத்தில் ஆக்கிய இயேசு காவியம் நூல் துபையில், எம் ஜே அப்துல் ரவூப் முன்னிலையில் , கவிஞர் பெருந்தகை வெள்ளம்ஜி எம் ஜே முஹம்மது இக்பாலிடம் முதல் பிரதியினை அளித்து வெளியிடச் செய்தார் .
கவிஞர் கண்ணதாசன் யேசு காவியம் என்ற நூலை பைபிளை அடிப்படையாக கொண்டு எழுதி இருந்தார். காப்பியக்கோ ஜின்னா ஷர்புத்தீன் குர்ஆன், மற்றும் நபிகளாரின் திருமொழிகளை அடிப்படையாக வைத்து ஆக்கி உள்ளது படிக்கக்கூடிய அனைவருக்கும் சிறந்த கருத்துகளை உள்ளடக்கமாக கொண்டுள்ளது. கிறித்துவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரும் படித்து சமயங்களின் கருத்துகளை அறிந்து கொள்ள மிக்க உதவியாக இருக்கும். சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக அமையும் என பொறியாளர் இக்பால் கூறினார். இந்த நிகழ்வில் ஜின்னா ஷர்புதீனின் மகனார் அர்ஷத் முஜீபும், குடும்பத்தினரும் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.
- தினமலர் வாசகர் அபு மஹீர்