/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ஷார்ஜாவில் தமிழக மாணவியின் 25வது புத்தகம் வெளியீடுஷார்ஜாவில் தமிழக மாணவியின் 25வது புத்தகம் வெளியீடு
ஷார்ஜாவில் தமிழக மாணவியின் 25வது புத்தகம் வெளியீடு
ஷார்ஜாவில் தமிழக மாணவியின் 25வது புத்தகம் வெளியீடு
ஷார்ஜாவில் தமிழக மாணவியின் 25வது புத்தகம் வெளியீடு
நவ 23, 2024

ஷார்ஜா : அபுதாபியில் படித்து வரும் தமிழக மாணவி சஜினி வரதராஜன் தனது 25வது புத்தகமான Le Monde De Kylie - A French Book அதாவது கைல்லியின் உலகம் என்ற பிரெஞ்சு மொழி புத்தகத்தை ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நடந்த 43வது சர்வதேச புத்தக கண்காட்சியில் எழுத்தாளர் மன்றத்தில் வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் அவரது பெற்றோர் வரதராஜன் மற்றும் ராதிகா, பிரெஞ்சு ஆசிரியர் சரண்யா முருகேசன், கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சஜினி வரதராஜன் 25 புத்தகங்களை எழுதிய இளம் எழுத்தாளர். அவர் ஆங்கிலத்தில் 23 புத்தகங்களையும், அரபியில் 1 மற்றும் பிரெஞ்சு மொழியில் 1 புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இளம் வயதில் 25 புத்தகங்களை எழுதிய தமிழக மாணவிக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி தொடர்ந்து இளம் எழுத்தாளர்களுக்கு வாய்ப்பினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
_ நமது செய்தியாளர் காஹிலா