ஏப் 15, 2024

ஷார்ஜா : ஷார்ஜாவில் ரமலான் திருவிழா மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடந்தது. இந்த திருவிழாவையொட்டி ஷார்ஜாவில் உள்ள பல்வேறு வர்த்தக நிலையங்களில் சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர்.
- நமது செய்தியாளர் காஹிலா
இந்த திருவிழாவின் போது பொருட்களை வாங்கிய பொதுமக்கள் பல்வேறு அதிர்ஷ்ட பரிசுகளை வென்றனர். இதனால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர். நிறைவு நாளையொட்டி சிறப்பு கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தது.
- நமது செய்தியாளர் காஹிலா