/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/பஹ்ரைனில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்பஹ்ரைனில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
பஹ்ரைனில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
பஹ்ரைனில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
பஹ்ரைனில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
ஜூன் 07, 2024

மனாமா : பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் உள்ள இந்திய தூதரகம் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாமை நடத்தியது. இந்த முகாமுக்கு இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் தலைமை வகித்தார்.
இந்த முகாமில் பொதுமக்கள் பாஸ்போர்ட் புதுப்பித்தலில் கால தாமதம், சம்பளம் கிடைப்பதில் தாமதம், கல்வி உதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக புகார் தெரிவித்தனர்.
இந்த புகார்களை கேட்ட இந்திய தூதர் தலைமையிலான அதிகாரிகள் புகார்களின் அடிப்படையில் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா