Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ஆதரவாளர்களை கத்தார் தமிழர் சங்கம்கௌரவித்த சங்கமம்

ஆதரவாளர்களை கத்தார் தமிழர் சங்கம்கௌரவித்த சங்கமம்

ஆதரவாளர்களை கத்தார் தமிழர் சங்கம்கௌரவித்த சங்கமம்

ஆதரவாளர்களை கத்தார் தமிழர் சங்கம்கௌரவித்த சங்கமம்

ஜூன் 06, 2024


Google News
Latest Tamil News
கத்தார் நாட்டில் கடந்த மே மாதம் 28ம் தேதி மாலை சீஷெல் சவோரி உணவகத்தின் அரங்கில் கத்தார் தமிழர் சங்கம் தனது வருடாந்திர அனுசரனையாளர்கள் அனைவரையும் அழைத்து பெருமைப் படுத்தியது.

இந்த சங்கமத்தில் கத்தார் தமிழர் சங்கத்துக்கு பின்புலமாக நின்று ஆதரவு அளித்துவரும் அனைத்து பெருநிறுவன, சிறுநிறுவன பெருந்தகைகளும் வந்திருந்து சிறப்பித்தனர். அவர்களை கத்தார் தமிழர் சங்கத்தின் நிர்வாகக் குழுவினர் பாராட்டி பேசியதோடு தமிழர் சங்கத்தின் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துரைத்து அதன் வாயிலாக ஆதரவாளர்கள் எவ்வாறு பயனடையலாம் என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.



மேலும் பல்வேறு மக்கள் நலம் சார்ந்த விஷயங்கள் இந்த சங்கமம் நிகழ்வில் பலதரப்பட்டவர்களால் கலந்துரையாடல் போல கருத்துகளும் சீரிய சிந்தனைகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.



உதாரணமாக, கத்தார்வாழ் இந்தியர்களுக்காகவே, இந்திய தூதரக்தின் கீழ் இயங்கி வரும் 'இந்திய சமூக நல மன்றம்' குறைந்த ப்ரீமியம் தொகையில் ஆயுள் காப்பீட்டு திட்டத்தை வழங்கி வருகிறது. இதன் முக்கியத்துவம் பற்றியும், இது எந்த அளவு பயனாளிக்கும் அவரது குடும்பத்துக்கும் நம்பிக்கை தருகிறது என கருத்துப் பரிமாற்றம் பார்வையாளர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.



தமிழ்நாட்டிலிருந்து கத்தாரில் வேலை தேடுபவர்களுக்கு எப்படி வழிகாட்டுவது என்பது பற்றிய ஆரோக்கியமான குழு விவாதமும் கூட்டத்தில் நடைபெற்றது.



இந்த 'சங்கமம்' நிகழ்ச்சியில் கத்தார் தமிழர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான மணிபாரதி, சக்தி வேல், மோகன சுந்தரம், பாண்டியன், நகுலன், லஷ்மி ராமசெல்வம், நவீனப் ப்ரியா ராகவேந்திரன், துணைச்செயற்குழு மற்றும் ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு, கத்தார் தமிழர் சங்கத்துக்கு தொடர்ந்து ஊக்குவித்து ஆதரவு அளித்துவரும் வருடாந்திர அனுசரனையாளர்களை பாராட்டி, பரஸ்பரம் வாழ்த்தி மகிழ்ந்தனர்.



- நமது செய்தியாளர் எஸ்.சிவசங்கர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us