Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/அல் அசா தமிழ்ச் சங்கச் சார்பில் அடுப்பில்லா சமையல் போட்டி

அல் அசா தமிழ்ச் சங்கச் சார்பில் அடுப்பில்லா சமையல் போட்டி

அல் அசா தமிழ்ச் சங்கச் சார்பில் அடுப்பில்லா சமையல் போட்டி

அல் அசா தமிழ்ச் சங்கச் சார்பில் அடுப்பில்லா சமையல் போட்டி

நவ 30, 2024


Google News
Latest Tamil News
அல் அசா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, குளிர்காலத்தை கொண்டாடும்(Winter Festival) ஒரு பகுதியாக, பெண்களுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. போட்டியின் தலைப்பு 'தமிழ் பாரம்பரிய உணவுகள்' ஆக அமைந்தது.

பரிசு பெற்ற மான்விழி சுரேஷ், மஞ்சுளா அசோக் பிரசன்னா, லாவண்யா வெங்கட் ஆகியோர் சிறப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் நவதானியங்களை பயன்படுத்தி ஆரோக்கியமான உணவுகளைத் தயாரித்து, மற்றவர்களுக்குப் பாடமாக இருந்தனர். இந்த போட்டியில் பங்கேற்பாளர்கள் அவல் புட்டு, கேரட் டீ, பீட்ரூட் பானம், பச்சை புளி ரசம், நவதானிய மாவு வகைகள், பாணக்கம், அவல் தயிர்சாதம், முளைகட்டிய பயறு வகைகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உணவுகளை ஆர்வமுடன் தயாரித்தனர். பார்வையாளர்கள் அந்த உணவுகளை ருசித்து பாராட்டினர்.



பரிசுகள் Salkara Restaurant-Saudi Arabia ஆதரவுடன் வழங்கப்பட்டன. நடுவர்களாக பொறியாளர்கள் கருணாகரன், ரமேஷ், சுபஹான் திறம்பட செயல்பட்டனர்.



விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக இயன்முறை மருத்துவர் முத்துராமன், தாமஸ், பாஸ்கர், கார்த்திக் பங்கேற்று நிகழ்வை மேன்மைப்படுத்தினர்.



அல் அசா தமிழ்ச் சங்கம், சவுதி அரேபியாவின் தமிழ் சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்பின் முக்கிய அங்கமாக செயல்பட்டு, அதன் ஒருங்கிணைப்பாளர்களின் சிறந்த ஒத்துழைப்பின் மூலம் விழாவை வெற்றிகரமாக நடத்தியது.



- தினமலர் வாசகர் செந்தில் வடிவேல் பழனிச்சாமி







      Our Apps Available On




      Dinamalar

      Follow us