/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/உலக அளவில் முதல் 5ல் இடம் பிடித்த குவைத் சரவணபவனுக்கு விருதுஉலக அளவில் முதல் 5ல் இடம் பிடித்த குவைத் சரவணபவனுக்கு விருது
உலக அளவில் முதல் 5ல் இடம் பிடித்த குவைத் சரவணபவனுக்கு விருது
உலக அளவில் முதல் 5ல் இடம் பிடித்த குவைத் சரவணபவனுக்கு விருது
உலக அளவில் முதல் 5ல் இடம் பிடித்த குவைத் சரவணபவனுக்கு விருது

நடராஜன் மற்றும் ஆனந்தி நடராஜன் நடத்தி வரும் சரவண பவன் - குவைத் உணவகத்திற்கு, இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Indian Council for Cultural Relations (ICCR) வழங்கும் அன்னபூர்ணா விருது 2025 வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் பட்டியலிடப்பட்ட 160 இந்திய உணவகங்களில் தலைசிறந்த முதல் 5ல் ஒன்றாக, குவைத் சரவண பவன் (HSB) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு குவைத் தமிழ்ச் சங்கம் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இந்த விருது புது தில்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
உலக அரங்கின் இந்திய உணவகங்களில் நமது தமிழக உணவு சுவையை உயர்த்தியதற்காகவும் விருந்தோம்பல் பண்பாட்டில் உலகிற்கு முன்னோடியாக நம்மை நிறுவியதற்க்கும், நடராஜன் மற்றும் ஆனந்தி நடராஜனுக்கு குவைத் தமிழ் சங்க முன்னாள் நிர்வாகிகள் S. செல்லத்துரை, G. ராஜா, S. ராமதாஸ் & Dr. சாமி வெங்கட் ஆகியோர் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். தகவல் : ஆனந்தி நடராஜன்
- நமது செய்தியாளர் எஸ்.செல்லத்துரை