/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாய் கலாச்சார மையத்தை பார்வையிட்ட ஜப்பான் பல்கலைக்கழக மாணவியர்துபாய் கலாச்சார மையத்தை பார்வையிட்ட ஜப்பான் பல்கலைக்கழக மாணவியர்
துபாய் கலாச்சார மையத்தை பார்வையிட்ட ஜப்பான் பல்கலைக்கழக மாணவியர்
துபாய் கலாச்சார மையத்தை பார்வையிட்ட ஜப்பான் பல்கலைக்கழக மாணவியர்
துபாய் கலாச்சார மையத்தை பார்வையிட்ட ஜப்பான் பல்கலைக்கழக மாணவியர்
டிச 24, 2024

துபாய்: துபாய் நகரின் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் ஜுமா அல் மாஜித் கலாச்சார மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அரிய வகை அரபி மொழி ஆவணங்கள், அமீரகம் தொடர்பான பழையான தகவல்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தை பார்வையிட ஜப்பான் நாட்டு பல்கலைக்கழக மாணவியர் வந்தனர்.
அவர்களை கலாச்சார மையத்தின் அதிகாரிகள் வரவேற்று அங்குள்ள தகவல்கள் குறித்து விவரித்தனர். இதன் மூலம் அவர்கள் அமீரகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்ட விபரங்கள் குறித்து தெரிந்து கொள்ள உதவியாக இருந்ததாக கூறினர்.
-- நமது செய்தியாளர் காஹிலா