Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/இந்தியாவிலிருந்து தரைவழியாக சவூதி அரேபியா வந்த சாதனைப்பெண்

இந்தியாவிலிருந்து தரைவழியாக சவூதி அரேபியா வந்த சாதனைப்பெண்

இந்தியாவிலிருந்து தரைவழியாக சவூதி அரேபியா வந்த சாதனைப்பெண்

இந்தியாவிலிருந்து தரைவழியாக சவூதி அரேபியா வந்த சாதனைப்பெண்

டிச 23, 2024


Google News
Latest Tamil News
இந்தியாவிலிருந்து தரைவழிப் பயணத்தில் தனியாக மகிழுந்து(Car)வில் பயணம் செய்து பல நாடுகளை கடந்து சவூதி அரேபியா வந்தடைந்த சாதனைப்பெண் Solo Mom நவூசியை வரவேற்கும் நிகழ்வை இரட்டை உலகசாதனையாளர் பதுருதீன் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் 300 க்கும் மேற்பட்ட மக்களை மிக சொற்பமான மணித்துளிகளில் ஒருங்கிணைத்து பெரும் சவாலான நிகழ்வை இரவு உணவுடன் கூடிய சாதனை திருவிழாவாக நடத்தினார்.

இந்திய மக்கள் உட்பட பல்வேறு நாட்டு மக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு Solo Mom நவூசியை இரட்டை உலக சாதனையாளர் பதுருதீன் தலைமையில் வரவேற்று அவரின் சாதணையையும் தைரியத்தையும் பாராட்டி வாழ்த்தினர்.



இந்நிகழ்வில் சவூதி தமிழ்கலாச்சார மையத்தின் தலைவர் ரகமத்துல்லா, கிழக்கு மண்டலத் தலைவர் Saravanan Periyasamy, பக்ரைன் பாரதி தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலாளர் Abdul Qaiyum, ஜூபைல் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பிரேம் மற்றும் நிர்வாகிகள் கார்த்திக், பிரசாத், சிக்கந்தர் பாஷா, சவூதி அரேபியா தெலுங்கு நலச்சங்கத்தின் தலைவர் தேஜா, கேரளா நவோதயாவின் நிர்வாகி அப்துல் சலாம், Universal inspection நிறுவனத்தின் மேலாளர்கள் மற்றைய ஊழியர்கள், NRTIA வின் நிர்வாகிகள் வெங்கடேஷ், ஆரிப், கமால் பாட்ஷா; ஜூபைல் (Jubail Badminton club) பேட்மிட்டன் கிளப்பின் தலைவர் திலகன் மற்றும் நிர்வாகிகள், கேரளா SIMBA வின் நிர்வாகிகள், ஜூபைல் Jubail Toastmasters நிர்வாகிகள், SABIC நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் (employees), Madrid Football Club தம்மாம் நிர்வாகிகள், மற்றும் RISAS நிறுவனத்தின் மேலாளர் ரபீக் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வரவேற்று வாழ்த்தினர்.



- நமது செய்தியாளர் முகமது ரஹமத்துல்லா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us